- 05 June 2013
வீட்டை நகர்த்தும் முறை (கோப்புப்படம்)
இந்தியாவிலேயே முதன் முறையாக கோவையில் 400 டன் எடை கொண்ட வீடு இடிபடாமல் 50 அடி தூரத்துக்கு நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.கோவை சாய்பாபா கோயில் மேட்டுப்பாளையம் சாலையில் தங்கவேல் என்கிற ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு சொந்தமான் வீடு உள்ளது. இவரது தந்தை வழக்கறிஞர் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இந்த வீட்டை கட்டி முடித்தார். இந்த வீடு இரு தளங்களுடன் 8 அறைகள் கொண்ட வீடு. வீட்டின் பக்கவாட்டில் இன்னொரு வீடுகட்ட முடிவுக்கு வந்த தங்கவேலுவுக்கு இந்த வீட்டை இடிக்க மனம் வரவில்லை.
அதனால் வீட்டை அப்படியே நகர்த்தும் தொழில் நுட்பம் தெரிந்த நிபுணர் ஒருவரை ஹரியானாவில் இருக்கும் கம்பெனி ஒன்றின் மூலம் வரழைத்தார். வீட்டை நகர்த்தும் பணி கடந்த மார்ச் மாதம் துவக்கப்பட்டது. செப்டிக் டெங்க் இணைப்பு, அஸ்திவாரம் துண்டிக்கப்பட்டு, ஜாக்கிகள் உதவியுடன் வீடு ஒன்றைரை அடி உயரம் உயர்த்தப்பட்டது. பின்னர் அதன் கீழ் இரும்பு ரோலர்கள் பொருத்தப்பட்டு வீட்டை அணு அணுவாக நகர்த்தும்
பணி தொடங்கியது.
இதற்காக மொத்தம் 300 ஜாக்கிகள், 300 ரோலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகிறது. இந்த வேலையில் மொத்தம் 20 ஊழியர்கள் ஈடுபட்டனர். அடுத்த 20 நாட்களில் வெற்றிகரமாக 15 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி முடித்துள்ளனர் காலியிடத்தில் ஏற்கனவே போடப்பட்டு இருந்த அஸ்திவாரப் பணிசுவருடன் இந்த வீடு இணைக்கப்பட்டது. சுமார் 3 மாத காலம் இப்பணி நடைபெற்றதாகத் தெரிய வருகிறது. வீடு இடிக்கப்படாமல் புதிய இடத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த மக்கள் இதை ஆச்சரியத்துடன் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனறாம். முன்பு இருந்ததைவிட வீடு 3 அடி உயரத்துக்கு உயர்த்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் தங்கவேலு கூறுகையில், "சிறு கீறல் கூட விழாமல் 100சதவிகிதம் அப்படியே வீட்டை வேறு இடத்துக்கு நகர்த்தியுள்ளனர். வீட்டை முழுமையாக இடித்துவிட்டு, புதிதாக வீடு கட்டினால் 80லட்சம் ரூபாய் லட்சம் வரை செலவாகும். இப்போது 18 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரைதான் செலவாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment