மேலே சொன்ன மருந்தை சாப்பிடுற காலத்துல புளி
பொதுவா, தோல் வியாதிங்க வந்துட்டாலே மனுஷன ஆட்டிப் படைச்சிடும். நாலு இடத்துக்கு பந்தாவா போய் வரக்கூட முடியாத அளவுக்கு கை, கால், முகம்னு வெளியில தெரியற இடத்துலயெல்லாம்கூட பட்டை பட்டையா... சொறி சொறியா... முளைச்சு உயிரை
அருகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மையா அரைக்கணும். அதை தோல் வியாதி இருக்குற இடத்துல பூசி, அரை மணி நேரம் கழிச்சு குளிக்கணும். வாரத்துல மூணு நாள், நாலு நாள்னு நம்ம வசதிக்கு ஏத்தாப்புல இப்படி குளிச்சுட்டு வந்தா... நல்ல குணம் தெரியும்.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்துக்கோங்க, அதோட மூணு சின்ன வெங்காயம் சேர்த்து அரைச்சி உடம்பு முழுசும் பூசி, அரை மணி நேரம் கழிச்சி வெந்நீர்ல குளிச்சாலும், தோல் சம்பந்தபட்ட வியாதிக்கு குணம் கிடைக்கும்.
நன்னாரி வேர் (நாட்டு மருந்து கடையில் கிடைக் கும்) 20 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணி சேர்த்து நல்லா காய்ச்சணும். 200 மில்லி ஆனதும் இறக்கிறணும். காலையில நூறு மில்லி, சாயங்காலம் நூறு மில்லினு குடிச்சு வந்தா... தோல் நோய், வந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும்.
No comments:
Post a Comment