பெரும்பான்மையான மக்களின் உடலில் உள்ள இரத்த அணுக்க ளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், அனீமியா என்னும் மறதி
நோயால் அதிகளவில் பாதிக் கப்படுகின்றனர். ஆகவே அத்தகைய இரத்தத்தை
அதிகப்படுத்த கடை களில் நிறைய மருந்துகள் விற்கப் படுகின்றன. ஆனால் அவற்றை
சாப்பிடுவதால் மட்டும் உடலில் இரத்தம் அதிகரிக்காது. ஒரு சில இயற்கையான
வழிகளையும் தின மும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின்
எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும், உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இரு க்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள்
அதிகமாகிவிடும். மே லும் இரத்த அணுக்களின் எண்ணி க்கை குறைவினால் ஏற்படும்
நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக்
கொள்ளும் மருந்து, உண் ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்
சத்துக்கள்
நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத் தகைய உணவுகள்
என்னவென்று தெரிந்து கொள்வோம்…இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்…
மாதுளை:
மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன்
அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன் ட்கள் கொலஸ்ட்ராலைக் குறை த்து,
கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்க க்கூடிய இரத்த உறைவுகளில்
இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம்
கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை இவை
அதிகப்படுத்துகின்றன.
நன்னாரி வேர்:
மூலிகைகளில்
ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது.
இது இரத்த தில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக் கிறது.
கற்றாழை:
கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும்
அழற்சியை தடுக்கும்பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலு ம்
இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பீட்ரூட்:
இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான
அளவு இரத்த அணு க்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்
பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை
சுத்தப்படுத்து ம் உணவுப் பொருள். ஆகவே இதனை டயர்ட் இருப்பவர்கள் தங் கள்
உணவில் சேர்த்துக் கொண் டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் இரத்த
அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும்,
அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.
கீரைகள்:
காய்கறிகளான பசலைக் கீரை, ப்ரா
க்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்
கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கிய மானவை. மேலும் இவை அனைத்
தும் உடல் எடையை கட்டு படுத்து வதுடன், உடலில் இரத்த அணுக்க ளையும்
அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.
இரும்புச்சத்து:
இது
உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புக ளை மட்டும்
வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை
விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும்.
ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம்
பழம், உருளைக் கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில்
இருக்கும்.
பாதாம்:
இரும்புச்சத்து
மற்ற உணவுப் பொருட் களைவிட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு
நாளைக்கு 1 அவுண் ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உட லுக்கு 6%
இரும்புச்சத்தானது கிடைக் கும்.
பழங்கள்:
அனீமியாவால்
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய் கறிகளை சாப்பிடச்
சொல்வார்கள். இவற்றை உண் பதால் உடலுக்கு ஊட்ட ச்சத்துக்கள் கிடைப்பதோடு,
உடலில் உள் ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை
மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம்
போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.
கிவி பழம்:
இரத்தத்தில்
குருதிச் சிறுதட்டுகள் குறைவாக காணப்படுவோ கிவி பழங்களை சாப்பிட்டால் அதன்
உற் பத்தி அடிகரிக்கும் என பரிந்துரைக் கப்பட்டுளது
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். மேலும் சுத்த மான
ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய் யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும்
சுத்தமாக, சீராக உடலில் இயங்குகிறது. அந்த உடற் பயிற்சியில் வாக்கிங்,
ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை செய்யலாம்.
மேற்கூறிய
உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக் களின் அளவு அதிகரிப்பதோடு,
உடல் எடை அதிகரிக்காம ல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழ
லாம். இவை யாவற்றையும் உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோச ணையுடன் மேற்கொழ்வதன்
மூலம் தேவையற்ற தாக்கங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment