வணக்கம் நண்பர்களே..!
போட்டோக்களை எடிட் செய்ய.. மாற்றம் செய்ய.. டிசைன் செய்ய என அனைத்து வேலைகளுக்கு போட்டோஷாப் மென்பொருள் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் போட்டோஷாப் மென்பொருள் பற்றிய அறிவு எதுவும் இல்லாமல்.. போட்டோஷாப் மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமலேயே ஆன்லைன் மூலம் உங்களுடைய போட்டோக்களை எடிட் செய்யலாம்..டிசைன் செய்யலாம்.. Pixlr என்ற இணையதளம் இந்த வசதிகளையும், மதிப்பு மிக்க வாய்ப்புகளை வழங்குகிறது.
போட்டோஷாப்பில் இருக்கும் அத்தனை ஸ்டூல்களும் இதில் உள்ளன. ஆன்லைன் போட்டோஷாப், போட்டோ எடிட்டிங் செய்யப் பயன்படும் இணையதளத்தின் முகவரி http://pixlr.com/.
இதில் போட்டோக்களை டிசைன் செய்ய மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட இணைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றும் உங்களுடைய போட்டோக்களை, இமேஜ்களை டிசைன் செய்யப் பயன்படுகிறது.
இந்த இணைப்பின் வழி செல்லும்பொழுது போட்டோ எடிட்டிங் மென்பொருளான போட்டோஷாப் மென்பொருள் தோற்றத்தைக் காணலாம். இது ஒரிஜினில் போட்டோஷாப் மென்பொருள் தோற்றத்தை ஒத்திருக்கிறது. இதில்
1. Create a New Image - Strar with a blank image or from the clipboard
2. Open image from computer - Browse your computer to select an image
3. Open image from URL - Specify an URL of an image to fetch
4. Open Image from Library - Images from pixlr, facebook or other library
5. Use Pixlr on your mobile device - Download free mobile pixlr apps to your phone/tablet
என்ற ஆப்சன்கள் திறக்கும். இதில் இறுதியில் உள்ள Use Pixlr on your mobile device என்பது உங்களுடைய மொபைலுக்கான அப்ளிகேஷன் ஆகும். உங்களுடைய மொபைல் மூலம் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துவதற்கான இணைப்பு.

1. Online Photo Editor

இதில் எப்படி வேலை செய்வது?
- முதலில் Create a New Image என்பதில் கிளிக் செய்துகொள்ளுங்கள்.
- தோன்றும் விண்டோவில் உங்கள்படத்திற்கான பெயர் ,presets, with, height ஆகியவற்றைத் தேர்வு செய்துகொண்டு Ok கிளிக் செய்யுங்கள்.
- தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான படத்தை brush tool, pencil tool பயன்படுத்தி வரைந்து அதற்குத் தேவையான Effect களைக் கொடுத்துவிடுங்கள்.
- படத்தை முடித்த பிறகு நீங்கள் அதை உங்கள் கணினியில்சேமித்துக்கொள்ளலாம்.
- அதே சமயத்தில் Pixlr Library, Facebook, Flickr, Picasa ஆகிய தளங்களில் நேரடியாக பதிவேற்றக்கூடிய வசதியும் இதில் உள்ளது.
2. Online Photo Effects:
நீங்கள் உருவாக்கிய படத்திற்கு அழகான Effect களைக் கொடுக்கலாம்.. அல்லது
ஏற்கனவே உங்கள் கணினியில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் படங்களுக்கும்
Effect களைக் கொடுக்கலாம்.
- இதில் Adustment, Effect, Overlay, Border, Sticker, Text ஆகிய வசதிகள் உள்ளன.
- உதாரணமாக Effect என்ற வசதியைப் பயன்படுத்தி உங்களுடைய படங்களுக்கு பலவிதமான எஃபக்ட்களைக் கொடுக்கலாம்.
- அதேபோன்று Border என்ற வசதியை கிளிக்செய்வதன் மூலம் அதில் வழங்கப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு பார்டரை தேர்வு செய்து உங்களுடைய படத்திற்கு அழகான பார்டரை வடிவமைக்கலாம்.
- Text பயன்படுத்தி வேண்டிய டெக்ஸ்ட்டை படத்தின் மீது எழுதிக்கொள்ளலாம்.
- Sticker வசிதியைப் பயன்படுத்தி படத்தின் மீது ஸ்டிக்கர் எபக்ட்களைக் கொடுக்கலாம்.
- ஒவ்வொரு எஃபக்களிலும் பத்துக்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளன.
- Overlay வசதியைப் பயன்படுத்தி படத்தில் மேற்பகுதியில் டிசைன்கள் வருமாறு செய்யலாம்.
இதுபோன்று நிறைய வசதிகள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு வசதியையும் பயன்படுத்திவிட்டு, இறுதியாக Apply என்பதை கிளிக் செய்தால் அந்த எஃபக்ட்டானது உங்களுடைய படத்திற்கு வந்துவிடும்.
Original actress topsee |
இந்த முறையில் டிசைன் செய்யப்பட்ட நடிகை டாப்சியின் புகைப்படம் |
இந்த எஃபக்ட்களைக் கொடுத்த பிறகு இறுதியாக புதிய மாறுபட்ட டிசைன் செய்யப்பட்ட உங்களுடைய படத்தை சேமிப்பதற்கு மேலுள்ள Save என்ற பட்டனை கிளிக் செய்து, உங்களுடைய புதிய படத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
3. Vintage Photo Effects:
இந்த வசதியைப் பயன்படுத்தி உங்களுடைய சாதாரண போட்டோவிற்கு விண்டேஸ் போட்டோ எஃபக்ட்டை கொடுக்க முடியும்.
இதிலும் border, effect களைக் கொடுக்கமுடியும். இது ஒரு அற்புதமான வசதி. இது போட்டோவான நீரின் அடியில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். போட்டோவின் மேலம் கர்சரைக் கொண்டுசெல்லும்பொழுது நீர் விலகுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, நீரின் அடியில் உள்ள பொருள் களைந்து கோணல் மாணலாக தெரிவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.
மேற்கண்ட எஃபக்ட்களை நீங்களாகவே எளிதாக பெற முடியும். இதற்கு போட்டோஷாப்
உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.. உங்களிடம் கணினி, இணைய
இணைப்பு இருந்தால் மட்டுமே போதுமானது..
உங்களுடைய புகைப்படத்தை இத்தளத்தின் மூலம் ஒரு தொழில் ரீதியான புகைப்பட வடிவமைப்பாளரைப் போன்று டிசைன் செய்து கொள்ள முடியும்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களிடம்
பகிர்ந்துகொள்ளுங்கள்.. அவர்களும் பயனடையட்டுமே..! இப்பதிவைப் பற்றிய
சந்தேகங்களை பின்னூட்டத்தில் கேளுங்கள். பதிலளிக்க காத்திருக்கிறேன்.
நன்றி.
No comments:
Post a Comment