வெள்ளி (கோள்)
|
வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும்,சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன உச்சப்பிரகாசத்தை அடைகிறது, ஆதலாலே அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்க படுகிறது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது அதிகரித்த பச்சைவீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரைனங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.
பௌதிகப் பண்புகள்
இது புவியைப் போல கற்கோளத்தைக் கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டத்தட்ட புவியினுடையதை ஒத்துப் போவதால் இக் கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் ஆரை 12092 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டது.புவியியல்
வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம்மென்மையான லோபடே சமவெளியும் 70 சதவீதம் மென்மையான, எரிமலை சமவெளியும் அடக்கம். இதில் வடதுருவத்தில் ஒரு கண்டமும் வெள்ளியின் நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில் ஒரு கண்டமும் அமையப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையான பரப்பளவு கொண்ட வடக்கு கண்டம் பாபிலோனியக் காதல் தெய்வமான இசுதாரின் பெயரில் அழைக்கப்படுகிறது. மேக்ஸ்வெல் மோன்டசு, வெள்ளியின் மிக உயர்ந்த மலையாகும். அதன் சிகரம் சராசரி மேற்பரப்பு உயரமான 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பரப்பளவில் இரண்டு தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இணையான தெற்கு கண்டம் அப்ரோடைட் டெர்ரா கிரேக்க காதல் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.
புறத் தோற்றம்
புவியில் இருந்து மானிடர் நோக்கும் போது வெள்ளிக் கோளே எந்த விண்மீனை (சூரியனை தவிர்த்து) விடவும் வெளிச்சமாக உள்ளது. வெள்ளி பூமியின் அருகில் இருக்கும் போது அதன் பிரகாசம் அதிகமாகவும், தோற்றப்பருமன் -4.9 ஆகவும், பிறை கட்டத்திலும் காணப்படுகிறது. சூரியன் பின்னோளி வீசும் போது இதன் பிரகாசம் -3 ஆக மங்குகிறது. இக்கோள் நடுப்பகலிலும் காணத்தக்க பிரகாசமாக இருப்பதுடன் சூரியும் கீழ் வானில் இருக்கும் போது எளிதில் காணக் கூடியதாகவும் இருக்கிறது. இதன் சுற்றுப்பாதை சூரியனுக்கும் புவியின் சுற்றுப்பாதைக்கும் நடுவில் இருப்பதால் புவியில் இருந்து பார்க்கும் போது சூரியனின் நிலநடுக்கோட்டில் இருந்து 47 டிகிரி சாய்வு வரை அதிகமாக செல்வது போல் தோற்றம் அளிக்கிறது.மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம்
வெள்ளிக் கோள் பரப்பின் சூழல் தற்போது மானிடர் வாழும் சூழலை பெறவில்லை. ஆனால் வெள்ளிக் கோள் பரப்பில் இருந்து ஐம்பது கிலோமீட்டர்களுக்கு மேல் உள்ள வளி மண்டலம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாயுக்களான நைட்ரசனையும் ஆக்சிசனையும் பெற்றுள்ளது. அதனால் வெள்ளியின் வானில் மானிடர் மிதக்கும் நகரங்களை உருவாக்க வாய்புள்ளது. காற்றினும் எடை குறைந்த மிதக்கும் நகரங்களை (வலது பக்கத்தில் உள்ள மிதக்கும் விண்கலன் போல்) உருவாக்கி அதில் நிரந்தரக் குடியேற்றங்களை அமைக்க முடியும். ஆனால் இதில் மிகப்பெரிய அளவுக்கு பொறியியல் தொழில்நுட்பச் சவால்களும், இந்த உயரத்தில் உள்ள கந்தக அமிலத்தின் அடர்த்தியும் இதற்கு தடைகள் ஆகும்.சூரியனைக் கடக்கும் போது
- முதன்மைக் கட்டுரை - வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு
அவதானிப்பு
வெள்ளிக் கோள் / சுக்கிரன் | வெள்ளிக் கோள் / சுக்கிரன் | வெள்ளிக் கோள் / சுக்கிரன் |
---|---|---|
No comments:
Post a Comment