14
மார்ச் 1901ம் ஆண்டு பிறந்த Suzanne Burrier, தனது 112வது வயதில்
சாவடைந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த Montluçon (Allier) இலிருந்கும்
முதியோர் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சாவடைந்துள்ளார். கடந்த மே
மாதம் இவரிலும் நான்கு மாதங்கள் மூத்தவரான Irénise Moulonguet சாவடைந்ததை
அடுத்து இவரே பிரான்சின் அதிக வயது கூடிய பெண்ணாக இருந்தார். இவரின்
சாவிற்குப் பின்னர் 19ம் திகதி ஜுன் மாதம் 1901 ஆம் ஆண்டு பிறந்த Loire இல்
வசிக்கும் Olympe Amaury எனபவர் இப்போது பிரான்சின் அதிக வயது கூடிய
பெண்ணாகின்றார். இவருக்கு அடுத்தவராக Guyane இல் வாழும் 1ம் திகதி ஒக்டோபர்
மாதம் பிறந்த Eudoxie Baboul திகழ்கின்றார்.
|
No comments:
Post a Comment