அங்கு 60 செக்கனுக்குள் பல்லாயிரக் கணக்கான செயற்பாடுகள்
நடைபெறுகின்றன. அதேபோல் கோடிக்கணக்கான பாவனையாளர்கள் தங்கள் நேரத்தை அதில்
செலவழிக்கின்றனர்.
பேஸ்புக் லைக்கள், டுவிட்கள், ஸ்கைப் அழைப்புகள், பிலிக்கர்கள் படங்கள், யுடியுப் காணொளிகள் என்பன இதில் அடங்கும்.
இதனை தெளிவாகக் காட்டும் பொருட்டு 'கிவ்மீ' என்ற நிறுவனம் 'இன்போகிராப்' ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிசி மெக், பிஸ்னஸ் இன்சைடர், டெய்லிமெய்ல், போமட் போன்ற பிரபல
இணையத்தளங்கள் சிலவற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே
இதனை 'கிவ்மீ' வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நிமிடமொன்றில்
1. 216,000 படங்கள் இன்ஸ்ரகிராமில் பரிமாற்றப்படுகின்றன.
2. அமேசன் இணையத்தளத்தில் 83,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
3. பேஸ்புக்கில் 1.8 மில்லியன் 'லைக்ஸ்' போடப்படுகின்றது.
4. கூகுளில் 2 மில்லியன் தேடல்கள் இடம்பெறுகின்றன.
5. யுடியூப்பில் 72 மணித்தியாலங்கள் ஓடக்கூடிய காணொளிகள்.
6. 278,000 டுவிட்கள் பதிவு செய்யப்படுகின்றன.
7. புதிய இணைய முகவரிகள் 70 பதிவு செய்யப்படுவதுடன் 571 தளங்கள் உருவாக்கப்படுகின்றன.
8. 204 மில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றது.
No comments:
Post a Comment