
பேஸ்புக்
அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற
நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (“Facebook for every phone”) என்ற
புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இதன்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்ற ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் பேர் கூடுதலாக பேஸ்புக் இணைய தளத்தைப்
பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் மொபைல் போன்கள்
வழியாக, இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்க்ள் எண்ணிக்கை 75 கோடியே 10
லட்சம் பேர். உலக அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 110
கோடி.
ஸ்மார்ட் போன் மட்டுமின்றி, அடிப்படை வசதிகளுடன் கேமரா, வண்ணத்திரை மற்றும்
சாதாரண இணைய இணைப்பு கொண்ட மொபைல் போன்கள் அனைத்திலும் பேஸ்புக்
தளத்திற்கான இணைப்பை எளிதாக வழங்க பேஸ்புக் முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு வழியாகவே “Facebook for every phone” என்னும் இந்த அப்ளிகேஷன்
தரப்படுகிறது. இது இலவசமாகவே, மொபைல் போனில் பதிந்து தரப்படுகிறது. இதில்
செய்திகள், மெசஞ்சர் மற்றும் படங்களை அனுப்புதல் ஆகிய வசதிகள்
வழங்கப்படுகின்றன. இதனால் அதிக செலவின்றி, மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும்
உறவினர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க முடிகிறது.
வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக, இந்தியா, இந்தோனேஷியா மற்றும்
பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில், ஸ்மார்ட் போன் வாங்காமலேயே, சாதாரண மொபைல்
போன்களில் மக்கள் இந்த வசதிகளை அனுபவிக்க முடிகிறது. இணைய இணைப்பிற்கான
வழிகளைக் கொண்ட குறைந்தவிலை மொபைல் போனாக பேஸ்புக் தரும் இந்த அப்ளிகேஷன்
கொண்ட மொபைல் போன்கள் இருக்கின்றன.
இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இஸ்ரேல் நாட்டில் இயங்கும் மொபைல் சேவை
நிறுவனமான ஸ்நாப்டு (Snaptu) வடிவமைத்தது. இந்நிறுவனத்தினை பேஸ்புக் 2011
ஆம் ஆண்டில், விலைக்கு வாங்கியது.

தங்களுடைய
கம்ப்யூட்டர்களிலும், லேப்டாப்களிலும் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தினைப் பயன் படுத்துபவர்கள், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதனை
விடுத்து, மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாற வேண்டும் என, இந்திய
டிஜிட்டல் தகவல் போக்குவரத்தின் காவல் பிரிவு துறை கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பாக, எக்ஸ்பி பயன்படுத்தும் நிறுவனங்கள், தொடர்ந்து எக்ஸ்பி
சிஸ்டத்தினைப் பயன்படுத்துவது சரியல்ல என்று எச்சரிக்கை தந்துள்ளது. வரும்
2014 ஏப்ரல் முதல் மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பி ஆப்பரேட்டிங்
சிஸ்டத்திற்கான தன் ஆதரவை விலக்கிக் கொள்ள இருக்கிறது.
இதனால், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்பாட்டிற்கான பாதுகாப்பு புரோகிராம்களை மைக்ரோசாப்ட் வெளியிடாது.
எனவே, எக்ஸ்பியில் இயங்கும் சிஸ்டங்கள் இணைய இணைப்பில் மற்ற வைரஸ் மற்றும்
பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களால் தாக்குவதற்கான வாய்ப்புகள்
அதிகமாகும்.
இந்தச் சூழ்நிலையில், தங்கள் கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் காப்பாற்றிக்
கொள்ள, தகவல்கள் திருடு போகாமல் இருக்க, அனைவரும் அடுத்த சிஸ்டத்திற்கு
இப்போதே மாறிக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான், புதிய சிஸ்டத்தினை முழுமையாகப் புரிந்து கொண்டு அதிகப் பயனடைய முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை நாளுக்குப் பின்னர், எக்ஸ்பி சிஸ்டம்
இயங்கும் கம்ப்யூட்டர்களில், டேட்டா திருட்டு ஏற்பட்டால், நிச்சயம்
டிஜிட்டல் பாதுகாப்பு துறையினர் உதவிக்கு வர மாட்டார்கள் என்பதுவும்
உறுதியாகிறது.
No comments:
Post a Comment