உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும், விண்ணியல் ஆர்வலர்களின் கண்களும் ஐசான் வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியுள்ளன. ஐசான் என்னாகப் போகிறது, சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன நடக்கும் என்ற பேரார்வம் அத்தனை பேர் மனதிலும் அப்பிக் கிடக்கிறது.
படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு சூரியனை மிக மிக அருகே நெருங்கப் போகிறது. அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை, பொசுங்கிப் போய் விடும் என்று பொதுவான கருத்து இருந்தாலும் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment