டன்டாஸ் வீதி கிழக்கில் ஹியுரொன்ராறியோ கிழக்கு வீதிக்கண்மையில் அமைந்துள்ள பாத்திமா குறோசர்ஸ்சில் அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக மிசிசாகா தீயணைப்பு அவசர சேவை பிரிவு தலைமை அதிகாரி அலன் ஹில்ஸ் தெரிவித்துள்ளார்.
மளிகைக் கடையில் ஏற்பட்ட இந்த தீ அக்கடைத்தொடரில் அமைந்திருந்த ஏனைய கடைகளிலும் பரவ முன்னதாக காலை 7.30மணியளவில் தீயணைப்பு படையினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டனர். தீயை அணைப்பதற்கு ஆயிரக்கணக்கான கலன்கள் தண்ணீர் பாவிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அவ்விடத்தில் ஏற்பட்ட வெப்பமான பகுதிகள் மற்றும் சிறிய சுவாலைகள் போன்றனவற்றை
அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.கட்டிடத்தின் பின்பகுதி கூரை நெருப்பினால் பலவீனப்பட்டு அதிகாலை 3.30மணியளவில் விழுந்துள்ளதாக ஹில்ஸ் கூறியுள்ளார்.
எவரும் காயமடையவில்லை. விபத்திற்கான காரணமெதுவும் உடனடியாக தெரியவில்லை. ஆனால் ஒன்ராறியோ தீயணைப்பு பிரிவினர் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற டன்டாஸ் வீதியின் கிழக்கு பகுதி ஹியுரொன்ராறியோ கிழக்கில் புலன்விசாரனை காரணமாகவும், சுத்தப்படுத்தல் காரணமாகவும் பல மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கு மென அறிவிக்கப் பட்டுள்ளது. டன்டாஸ் வீதி கமலியா வீதியில் திரும்பவும் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
சுவாலையின் உயர்வு காரணமாக 9 தீயணைப்பு டரக் நிறைந்த குழுவினருடன் பல உதவி வாகனங்களுடனும் கடமையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதிகாலை உறைபனி வெப்பநிலை தீயணைப்பு குழுவினரின் தீயணைக்கும் போராட்டத்தை பாதிக்காதிருக்க 2 MiWay பேரூந்துகள் கொண்டு வரப்பட்டு அவர்கள் தங்களை வெப்பமாக்கி கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவர்களுக்கு பல மணித்தியாலங்கள் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment