கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். உலகத்தை எகிப்து, மேதியா, பாரசீகம், பாபிலோன், கிரேக்கம், ரோம் என ஆறு பேரரசுகள் ஆட்சி செய்தன. கி.பி. 1ல் ரோம் நாட்டின் பேரரசராக திபேரியு என்பவர் ஆட்சி செய்தார். அந்தக் காலத்தில் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதகுலத்தில் கன்னி மரியாளின் வயிற்றில் இயேசு பிறந்தார். கி.பி. 34ல் யூதாஸ் என்ற சீடனால் 30 வெள்ளிக்காசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டார். யூத மதக்குருக்கள் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொன்றனர். மரணத்திற்குப் பின்பு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று இயேசு முன்னறிவித்து இருந்ததால் ரோம் நாட்டின் போர்ச் சேவகர்கள் அவரது கல்லறையைக் காவல் காத்தனர். மூன்றாம் நாள் அதிகாலையில் வானத்தில் இருந்து வந்த கடவுளின் தூதன், கல்லறையில் வைக்கப்பட்டிருந்த பெரிய கல்லைப் புரட்டி அதன் மீது அமர்ந்தான், போர்ச்சேவகர்கள் தரையில் விழுந்து செத்தவர்கள் போல ஆனார்கள். அப்போது இயேசுவின் கல்லறைக்கு மரியாதை செலுத்த சிலர் வந்தனர். கல் புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டதும், சரீரத்தை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர் என்று புலம்பினர். அப்போது அங்கிருந்த கடவுளின் தூதன் அவர்களை நோக்கி,"அவர் அங்கே இல்லை, தாம் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்'' என்றார். பின்பு 11 சீடர்களில் தோமா என்பவரைத் தவிர பத்து பேர் பூட்டியிருந்த ஓர் அறையில் இருந்தனர். இயேசு அவர்களின் நடுவே காட்சியளித்தார். அப்போது இயேசு அங்கு வந்தார், தோமாவை நோக்கி “சந்தேகப்படாதே” என்று கூறி அவனது கைவிரலால் தன் காயங்களைத் தொட்டுக் காட்டினார். அவன் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுதான். இயேசு சீடர்களை நோக்கி,"கண்டு நீங்கள் விசுவாசிப்பீர்கள். காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்'' என்று கூறினார். அன்று முதல் இயேசு 40 நாட்கள் வரை தம்மை நம்பிய சீடர்களுக்கு காட்சியளித்து, 40வது நாள் பரலோகத்திற்கு ஏறிச் சென்றார். முட்டையானது ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக பெரும்பாலும் கருதப்படுகிறது, ஒரு முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புது வாழ்வின் குறியீடாக இருக்கிறது. ஈஸ்டர் விழா அன்று நன்றாக வேக வைக்கப்பட்ட முட்டையை சர்க்கரைப்பாகு ஊற்றி பதப்படுத்தி வண்ணம் பூசி அழகுபடுத்துகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உலக மக்களுக்காக ரத்தம் சிந்தியதை நினைவு கூரும் வகையில் இந்த வண்ணம் தடவப்படுகிறது. ஆனால் தற்கால வழக்கில் சாக்லெட் முட்டைகள், ஜெல்லி பீன்கள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களை உள்ளடக்கிய பிளாஸ்டிக் முட்டைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. |
யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.
கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.
மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.
யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.
இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment