
பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்படுத்துவதில் அதன் முழுமையான பயனையும் பெறுவதில்லை.
குறிப்பிட்ட
சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை
அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்களையும்
வசதிகளையும் காணலாம்.
1.
பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட்
அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட, மவுஸ் + ஷிப்ட்
கீகளைப் பயன்படுத்த இடம் தருகின்றன.
தேர்ந்தெடுக்க
வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் கிளிக் செய்திடவும். பின்னர், ஷிப்ட்
கீயை அழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப்போது நீங்கள்
விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும்.
இந்த
வகையில் ஆல்ட் கீ வேறு ஒரு வகையான வசதியைத் தருகிறது. ஆல்ட் கீயை
அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம்.
டேபிள் நெட்டு வரிசை, பாராவில் பாதி எனத் தேர்ந்தெடுக்கையில், இந்த
பயன்பாடு அதிகம் உதவும்.
2. டாகுமெண்ட் பக்கங்களின் ஊடாகச் செல்ல, தற்போது மவுஸின் ஸ்குரோல் வீலை அனைவரும் பயன்படுத்துகிறோம்.
இந்த
ஸ்குரோல் வீலை இன்னும் சில பணிகளுக்குப் பயன்படுத்தலாம். மவுஸின் ஸ்குரோல்
வீல், ஒரு வீலாக மட்டுமல்ல, பட்டனாகவும் பயன்படுகிறது. மவுஸின் மூன்றாவது
பட்டனாக இது செயல்படுகிறது.
இதனை
அழுத்தினால், அது மவுஸின் மூன்றாவது பட்டனாகத் தனிப்பட்ட செயல்பாட்டினைத்
தரும். இதனைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றில் கிளிக் செய்து,
இணையப்பக்கத்தினைத் திறக்கலாம். பிரவுசரின் மேலாக இணையதளங்களுக்கான
டேப்பில் வீலை அழுத்தினால், அந்த இணைய தளம் மூடப்படும்.
3.
இணைய தளப் பக்கம், வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் போன்றவற்றில்,
கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், பெரிதாகவும்,
சிறியதாகவும் (zoom in and zoom out) காட்டப்படும்.
4.
ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, இணையப் பக்கங்களில், மேலும் கீழுமாக
ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்களிடையே மேலும் கீழுமாகச் செல்லலாம். சில
மவுஸ் வீல்களை, இடது வலதாகவும் நகர்த்தி, இணையப் பக்கத்தில் மேலும்
கீழுமாகச் செல்லலாம்.
5. இரண்டு மற்றும் மூன்று முறை கிளிக்: எந்த சொல்லையும், அதன் மீது டபுள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம்.
No comments:
Post a Comment