இரவு படுத்ததும் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து விடுகிறது. பகலில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது எதனால்?
இரு காரணங்களால் இப்பிரச்னை வரலாம். முதல் காரணம், இரவில் நீங்கள் உறங்கும் போது சளி, மூச்சுக்குழாயின் பின்புறம் வழியாக நுரையீரலுக்குள் செல்வதால்
இருக்கலாம்.
இண்டாவதாக, இரவில் லேட்டாக சாப்பிட்டு, உடனே படுத்து விடுவதால் இருக்கலாம். உணவு சரியாக ஜீரணம் அடையாமல், படுத்தவுடன் உணவுத்துகள் மூச்சுக்குழாய்க்குள் வருவதால் தொந்தரவு ஏற்படும். எனவே உடன் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்கு தாமதமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால், உடனடியாக மாற்றிக் கொள்வதுதான். இரவு 7 மணிக்கு சாப்பிடுங்கள். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்துதான் படுக்கைக்கு செல்ல வேண்டும். இதனை பின்பற்றியும் இருமல் தொடர்ந்து இருந்தால், நீங்கள் டாக்டரை பார்க்க வேண்டும். இருதய பிரச்னையால் கூட இதுபோன்ற
பிரச்னை வர வாய்ப்பு உள்ளது.இரு காரணங்களால் இப்பிரச்னை வரலாம். முதல் காரணம், இரவில் நீங்கள் உறங்கும் போது சளி, மூச்சுக்குழாயின் பின்புறம் வழியாக நுரையீரலுக்குள் செல்வதால்
இருக்கலாம்.
இண்டாவதாக, இரவில் லேட்டாக சாப்பிட்டு, உடனே படுத்து விடுவதால் இருக்கலாம். உணவு சரியாக ஜீரணம் அடையாமல், படுத்தவுடன் உணவுத்துகள் மூச்சுக்குழாய்க்குள் வருவதால் தொந்தரவு ஏற்படும். எனவே உடன் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்கு தாமதமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால், உடனடியாக மாற்றிக் கொள்வதுதான். இரவு 7 மணிக்கு சாப்பிடுங்கள். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்துதான் படுக்கைக்கு செல்ல வேண்டும். இதனை பின்பற்றியும் இருமல் தொடர்ந்து இருந்தால், நீங்கள் டாக்டரை பார்க்க வேண்டும். இருதய பிரச்னையால் கூட இதுபோன்ற
என் குழந்தைக்கு இளைப்பு உள்ளது. இன்ஹேலர் கொடுக்கிறேன். குழந்தைக்கு இன்ஹேலர் கொடுத்தால், வளர்ச்சி பாதிக்கும் என சிலர் கூறுவது உண்மையா?
ஒன்றை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சளி தொந்தரவு அதிகம் இருந்தால்தான் மாத்திரை, சிரப் எல்லாமே தேவைப்படும். பிரச்னை சிறியதாக இருக்கும்பட்சத்தில் இன்ஹேலர் மட்டும் போதும். இன்ஹேலர்கள் எடுப்பதால் எந்தப் பிரச்னையும் வராது.
இன்ஹேலர் எடுத்தபின், வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் வாய்ப்புண் மட்டுமே வர வாய்ப்புள்ளது. வேறு எந்த பக்கவிளைவுகளும் வராது. உங்கள் உறவினர் கூறுவதை விடுங்கள். இன்ஹேலர் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி நிச்சயம் பாதிக்காது. இன்ஹேலர் எடுக்கவில்லை என்றால் தான் மூச்சுக்குழாய் தொந்தரவு வளர வளர அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நான் என் அத்தை மகளை திருமணம் செய்துள்ளேன். குழந்தைக்கு அடிக்கடி சளி, இருமல் தொந்தரவு இருந்து கொண்டு இருக்கிறது. பரிசோதித்த டாக்டர், வலதுபக்க நுரையீரலில் தீவுபோன்று இன்னொரு நுரையீரல் உள்ளதென கூறுகிறார். இதனால் பிரச்னை வருமா?
நுரையீரலில் இதுபோல தீவுபோன்று இன்னொரு நுரையீரல் இருப்பதை, 'சீக்வெஸ்ட்லேஷன்' என்பர். சொந்தத்தில் திருமணம் செய்வதால் ஏற்படும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. பொதுவாக நமக்கு இருக்கும் இருநுரையீரலுக்கும், தனி ரத்த ஓட்டம் இருக்கும். அதைப்போலவே இந்தத்தீவு போன்ற நுரையீரலுக்கும் ரத்த ஓட்டம் எல்லாம் தனியாகவே இருக்கும். ஆனால் இதில் தொடர்ச்சியாக நோய் தொற்று ஏற்பட்டு, சளி பிரச்னை அதிகமாக ஏற்பட்டுக் கொண்டே இருந்தால், குழந்தை வளர்ந்ததும், அந்த நுரையீரலை நீக்கி விடலாம். அதன்பின் இப் பிரச்னை வராது. ஏற்கனவே நான் சொன்னதைப் போல நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்வதால் இதுபோன்ற நிறைய பிரச்னைகள் வரலாம். இதை தவிர்ப்பதே நல்லது.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425 24147.
No comments:
Post a Comment