பாறை வகை சிங்கியில், பேனுலிரஸ் கொமரைஸ், பாலிபெஜஸ், ஆர்னேடஸ், வெர்சிகோலா, பெனிசிலேடஸ், லான்ஜிபஸ் இறால்கள் உள்ளன. ஆழ்கடல் சிங்கியில்,
பியூரலஸ் செவெல்லி, லினுபேரஸ், சொம்யோசன் இறால்கள் உள்ளன. மணல் சிங்கியில் தெனஸ் ஓரியன் டாலிஸ், பே.பாலிபேஜஸ், கோமரஸ், ஆரனேடஸ் இறால்கள் காணப்படும். சிங்கி இறாலை பொறுத்தவரை செயற்கை முறையிலும் வளரும் தன்மை கொண்டது. உடன் இருப்பவை தாக்காமல், தானும் விரைவில் வளரும் குணம் இதற்கு உண்டு.
ஜப்பான், நியூசிலாந்து நாடுகளில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் இவ்வகை சிங்கி இறால் வளர்ப்பு, குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ளன. மீன் கழிவுகள், சிறிய நண்டுகள், சிப்பிகள் ஆகியவற்றை உணவாக எடுத்து கொள்கிறது. கைட்டின் மற்றும் கைட்டோசன் போன்ற வேதிப்பொருட்களை இவை உற்பத்தி செய்கின்றன என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு வளரும் நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. உச்சத்தில் இருக்கும் இவற்றின் விலைக்கும் இதுவே காரணம். மன்னார் வளைகுடாவில் மீனவர்களின் வலைகளில், எப்போதாவது பிடிபடும் போது தான், இவற்றை காண முடிகிறது. அந்த அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவற்றின் கிராக்கியே இதன் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளதென்பதையும் மறுப்பதற்கில்லை.
No comments:
Post a Comment