வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை வளரும். கணக்கு நல்லா போடலாம்...’’ என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களைப்
பார்க்கலாம். வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியானத் தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம் வேண்டாம்.
என்ன இருக்கிறது? (100 கிராமில்)
ஆற்றல் 33 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் 7.45 கிராம்
கொழுப்பு 0.19 கிராம்
புரதம் 2 கிராம்
வைட்டமின் ஏ 36 மியூஜி
வைட்டமின் சி 23 மி.கி.
வைட்டமின் இ 0.27 மி.கி.
வைட்டமின் கே 31.3 மியூஜி
கால்சியம் 82 மி.கி.
இரும்பு 0.62 மி.கி.
‘‘ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என அழைக்கப்படுகிறது
வெண்டைக்காய். உலகின் மிக அழகிய பெண்களான எகிப்து நாட்டைச் சேர்ந்த கிளியோபாட்ராவும் சீனாவை சேர்ந்த யாங் குஃபரும் வெண்டைக்காய் பிரியைகள் என்கிறது வரலாறு. அவர்களது அழகு ரகசியங்களில் வெண்டைக்காய்க்கும் முக்கிய இடமுள்ள தாகச் சொல்லப்படுகிற தகவல்கள் ஆச்சர்யமளிக்கின்றன...’’ வெண்டைக்காயைப் பற்றிய வியப்பான தகவலுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷரீஃபா தல்ஹா. வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள், தேர்ந்தெடுக்கும் முறை, சமைக்கும் விதம் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் அவர்.
‘‘கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.
வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். ஆனால், அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியதும் கூட.
ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. தவிர, இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சி யையும் தவிர்க்கக் கூடியவை.
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த ஒரு காய் இது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும். 100 கிராம் வெண்டைக்காயில் இருப்பது வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே.
வெண்டைக்காய் சாப்பிட்டால் பார்வைத் திறன் மேம்படும் என்கிற தகவல் பலருக்கும் தெரியாது. வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது. வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் என்பதும் கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்னைக்கு உதவும் என்பதும் பலருக்கும் புதிய தகவல்களாக இருக்கும்.கிளியோபாட்ராவும் யாங்கும் உபயோகித்த வெண்டைக்காய் ஆயிற்றே... வெண்டைக்காய்க்கு சரும அழகைக் கூட்டும் குணம் உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடல் சுத்தமாகிறது. அதனால் சருமம் தெளிவாகிறது. பரு வருவது கூட தடுக்கப்படுகிறது. வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும்.’’
எப்படி வாங்குவது?
வெண்டைக்காயின் நுனிகளை உடைத்தால் பட்டென்று உடைய வேண்டும். அதுதான் ஃப்ரெஷ்ஷானது என்பதற்கான அடையாளம். உடைக்க முடியாமலோ, உள்ளே உள்ள முத்துக்கள் புடைத்துக் கொண்டு வெளியே தெரிந்தாலோ, அதை வாங்க வேண்டாம். முற்றிய வெண்டைக்காய் ருசியாக இருக்காது.
எப்படிச் சமைப்பது?
ஆர்கானிக் வெண்டைக்காய் கிடைத்தால் மிகவும் நல்லது. வெண்டைக்காயில் பூச்சிகள் இருக்கும். ஆப்பிள் சிடர் வினிகரும் உப்பும் கலந்த தண்ணீரில் வெண்டைக்காய்களை முழுசாக அப்படியே சிறிது நேரம் போட்டு வைத்திருந்து விட்டு, பிறகு நன்கு அலசி சமைப்பதே சிறந்தது. வெண்டைக்காயை அலசிய பிறகே நறுக்க வேண்டும். நறுக்கிவிட்டு அலசினால் கொழகொழப்புத் தன்மையைக் கையாள்வது மிகவும் சிரமமாக இருக்கும். கூடியவரையில் இதை அரைவேக்காடாக சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.
ஸ்டஃப்டு வெண்டைக்காய்
என்னென்ன தேவை?
வெண்டைக்காய் - கால் கிலோ, மிளகாய் தூள் - 20 கிராம், மஞ்சள் தூள் - 5 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
வெண்டைக்காயை கழுவித் துடைக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். வெண்டைக்காயை காம்பு நீக்காமல் நீளமாக வகிர்ந்து கொள்ளவும். தயாராக உள்ள மசாலாவை உள்ளே ஸ்டஃப் செய்யவும். கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வெண்டைக்காய்களை நன்கு வேகும் வரை வதக்கி எடுக்கவும். சூடாகப் பரிமாறவும். மிளகாய் தூளுக்குப் பதில் பச்சை மிளகாய், ஓமம், கொத்தமல்லித் தழை, இஞ்சி-பூண்டு விழுதுக் கலவையை ஸ்டஃப் பண்ணியும் செய்யலாம்.
வெண்டைக்காய் பச்சடி
என்னென்ன தேவை?
வெண்டைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - 1, தக்காளி - 1, பூண்டு - 6 பல், இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகுத் தூள், தனியா தூள், சீரகத் தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கெட்டியான தேங்காய்ப் பால் - 3 டேபிள்ஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன், வெல்லத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை தாளிக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் பொன்னிற மாகும் வரை வதக்கவும். மிளகாய் தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். தேங்காய்ப் பால், புளிக்கரைசல், மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். அதை வெண்டைக்காய் கலவையில் விடவும். உப்பும் வெல்லமும் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைத்து இறக்கவும்.
புலாவ், பிரியாணிக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது.
வெண்டைக்காய் மண்டி
என்னென்ன தேவை?
எண்ணெய் - அரை கப், தாளிப்பதற்கு- கடுகு, சீரகம், உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன், சாம்பார் வெங்காயம் - ஒரு கப், வெண்டைக்காய் - 1/2 கிலோ, தக்காளி - 2 பெரியது, கறிவேப்பிலை - ஒரு பிடி, பூண்டு - 6 பல், தனியா தூள், சீரகத் தூள், மிளகாய் தூள் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், அரிசி மாவு - 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, புளி - சிறிதளவு.
எப்படிச் செய்வது?
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை வதக்கவும். அத்துடன் கறிவேப்பிலை, பூண்டு சேர்ந்து வதங்கியவுடன் நீளநீளமாக நறுக்கிய வெண்டைக்காய் போட்டு வதக்கவும். பின் மசாலா தூள்களைச் சேர்த்து பொடி வாசனை போனபின், தக்காளியைச் சேர்த்து வதக்கி உப்புப் போட்டு கடைசியில் புளித் தண்ணீரையும் சேர்க்கவும். நிறைய தண்ணீர் சேர்க்க வேண்டாம். தளதளவென்று கொதி வந்தவுடன் அரிசி மாவைத் தண்ணீருடன் கலந்து கொதிக்கும் மண்டியில் விடவும். கெட்டியானவுடன் இறக்கிப் பரிமாறவும். இது இட்லி, தோசை, ஆப்பம் முதலானவற்றுக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் ஏற்றது.

No comments:
Post a Comment