Feb 2, 2015

யாழ்மாவட்டத்தின் சிறந்த பாற்பசுப் பண்ணையாளராக வல்வையை சேர்ந்த திரு.ரவி தெரிவு



யாழ்மாவட்டத்தின் சிறந்த பாற்பசுப் பண்ணையாளராக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.நாகேஸ்வரன் ரவி அவர்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற உழவர் பெருவிழாவில் விருதுகள் மற்றும் பணப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வடக்கின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தையொட்டி உழவர் பெருவிழாவை நடாத்தி வருகிறது.
திரு.ரவி அவர்கள் இதற்கு முன்னரும் 2012 ம் ஆண்டுக்கான யாழ்மாவட்டத்தின் சிறந்த கால்நடை வளர்ப்பாளராக  வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.                         
வல்வெட்டித்துறை மானாங்கானையில் உள்ள இவரது பண்ணியல் 25ற்கு மேற்ப்பட்ட பசுக்களை வளர்த்துவருவதோடு, அவற்றிக்கான தீவணங்களை இயற்கை முறையில் தயாரித்து வருகிறார். இதற்காக தனது தோட்டத்தில் புற்களை பெருமளவில் வளர்த்து வருகின்றார்.
உழவர் பெருவிழாவில் வடக்கு மாகாண முதலமைச்சரால் விருது வழங்கப்படும் பொழுது 
வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் விருது 


2012 ஆம் ஆண்டு சிறந்த கால்நடை வளர்ப்பாளராக தெரிவுசெய்யப்பட்ட ரவி வல்வையில் கெளரவிற்கப்பட்டபொழுது
ரவி அவர்களின் பசுப்பண்னை மற்றும் பசுக்களுக்காக வளர்க்கப்படும் புற்கள் 

யாழ்மாவட்டத்தின் 2012 ம் ஆண்டுக்கான சிறந்த கால்நடை வளர்ப்பாளராக திரு.ரவி தெரிவு செய்யப்பட்டார்- எமது செய்தி தொகுப்பைக் பார்வையிட ---- http://www.valvettithurai.org/newsdetails.php?id=253

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...