Apr 17, 2015

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய உணவுகள்


பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் தங்களது உணவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
தூங்க செல்வதற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம்.
இதோ தூக்கத்திற்கான உணவுகள்
பாதாம்
பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் தூங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
தேநீர்
தூங்க செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக்
கொடுக்கக் கூடியவை.
அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியமின்(Thiamine) எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்
மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரப்போனின்(Troponin) உள்ளது.
இந்த ட்ரப்போனின், செரடோனின் (Seradonin)ஆகவும் மெலடோனின்(Meladonin) ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹார்மோன்களுக்கு அவசியமானவை.
பால்
பால், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது.
ஓட்ஸ்
ஓட்ஸில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன.
ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.
செர்ரி பழம்
தூக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் என்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரி பழங்கள்.
அதனால் இரவு தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...