Apr 30, 2012

கொலஸ்ட்ரால்(Cholestrol) என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல்

(Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.



கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும்,

கீரை+மரக்கறி+உப்பு - ஆரோக்கியக் குறிப்புகள்

உடல் ஆரோக்கியத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது. உங்களுக்கு உதவும் வகையில் சில கீரைகள், காய்கறிகள், மற்றும் உப்பு பற்றிய விளக்கம் இங்கே இடம் பெற்றுள்ளது.

காயசித்தி :
உடல் வளத்தைப் பெருக்கி பொன்நிற மேனியைக் கொடுத்து மன்மதனாக்கவல்ல மகோன்னத சக்தி மறைந்துள்ள கீரை மஞ்சள் பூ கரிசலாங்கண்ணியாகும். விழிக்கு ஒளியைப்பெருக்கிக் கொடுத்து, சிந்திக்கும் திறத்தைக் கூட்டிக் கொடுத்து அறிவாளியாக அரங்கேற்றி அழகு பார்க்கும் அற்புத மூலிகை. மஞ்சள்காமாலை, குன்மக்கட்டி போன்ற நோய்களை விரட்டியடித்து விடும். மொத்தத்தில் இது ஒரு காயகல்பம். எனவேதான் வடலூரார், இந்தக் கீரைக்கு ‘காயசித்தி’ என வாய்மொழிந்தார்.

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீர் கழித்த இடத்தில் நிறைய எறும்புகள்... இது எந்த நோயின் அறிகுறி


நான் ஒரு விவசாயி. வயது 60. சிறுநீர் கழித்த இடத்தில் நிறைய எறும்புகள் மொய்க்கின்றன. "சர்க்கரை நோய் உனக்கு உள்ளது, சிறுநீரகம் பழுதாகிவிட்டது' என்று நண்பர் பயமுறுத்துகிறார். இது எந்த நோயின் அறிகுறி? இதற்கு என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?
வை.தேவராஜன், அடைக்கம்பட்டி.
"மூத்ரஸ்யக்லேதவாஹனம்' என்கிறது ஆயுர்வேதம். சிறுநீரின் வழியாக "க்லேதம்' அதாவது உடல் உட்புறப் பிசுபிசுப்பு திரவம் எடுத்துச் செல்லப்பட்டு வெளியேறுகிறது என்று அதற்கு அர்த்தம் கூறலாம். இந்தத் திரவம் எங்கிருந்து ஏற்படுகிறது? உணவில் இயற்கையாகவே அமைந்துள்ள கொழுப்புப் பொருட்கள், எண்ணெய்ச் சத்துகள், இனிப்புச்

கதிர்ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்


ஆண்களுக்கும் எலும்புத்
தேய்மான நோய் ஏற்படுவது ஏன்?
 தவிடாய் நின்று போன பின்னர் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரப்பது நின்று போய்விடுவதால் ஞநபஉஞடஞதஞநஐந எனும் எலும்புகள் வலுவிழந்து போகும் உபாதை ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஆண்களிலும் பல இளைஞர்களுக்கும் இந்த உபாதை ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. சாதாரணமாகத் தடுக்கி விழுந்தால் கூட கை, கால், எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும் இந்த உபாதையைப் பற்றி ஆயுர்வேத விஞ்ஞானம் சொல்லும் அபிப்பிராயம் என்ன?
 எஸ்.அனந்தராமன், புட்டபர்த்தி.
 "தத்ராஸ்தினிஸ்திதோ வாயு:' என்கிறது ஆயுர்வேதம். வாயு எலும்பில் இருப்பதாக அதற்கு அர்த்தம்.

வயதானவர்களு‌க்கான உணவு முறை


தானவர்களு‌க்கான உணவு முறை
   
   
0


உலகிலேயே அதிக ஆயுள் உடையவர்கள் ஜப்பானியர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அ‌‌திலு‌ம் தெற்கு ஜப்பானில் உள்ள ஓகினாவன் தீவுகளில் வா‌ழ்பவ‌ர்க‌ள் கூடுத‌ல் ஆயுளுட‌ன் வா‌ழ்‌கி‌ன்றன‌ர்.

இத‌ற்கு‌க் காரண‌ம் அவ‌ர்களது உணவு முறைதா‌ன். அ‌ப்படி எ‌ன்னதா‌ன் அவ‌ர்க‌ள் சா‌ப்‌பிடு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று பா‌ர்‌த்தா‌ல், நிறைய தானிய வகைகள், சோயா மற்றும் மீன். ௦ஆனால் இறைச்சி மற்றும் பால் பொருட்களை அவர்கள் ‌மிக‌க் குறை‌ந்த அள‌விலேயே எடுத்துக் கொள்கின்றனர்.

வயதாக வயதாக, உடலின் சக்தி குறைகிறது. அத‌ற்கே‌ற்ப ஊட்டச்சத்துகளின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே அ‌ந்த சமய‌த்‌தி‌ல் இதுபோ‌ன்ற உணவு முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆயுள் அதிகரிப்பதோடு, முதுமை‌யினா‌ல் உட‌லி‌ல் ‌ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்க‌ள் தாமதமாக ஏற்படு‌ம்.

கு‌றி‌ப்பாக முதுமை‌யி‌ல் ஏ‌ற்படு‌‌ம் எலும்புத்

மருத்துவ செய்தி உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவுப் பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

திடீரென மாரடைப்பு வருவதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை சேர்ப்பதும் தான் காரணம்

உடலுக்கு வலிமையை தரும் சிறு தானியங்கள்

உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு தான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது.

இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம் தான்.

இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற

Apr 29, 2012

சோற்றுக் கற்றாழை அதிசயத் தாவரம் !


தேடிய சொர்க்கம் அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம் எனப் பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படும் கற்றாழை அழகுக் குறிப்புகளின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.
சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.
எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கால்நடைகளுக்கான முதலுதவிகள்

கால்நடைகளுக்கான முதலுதவிகள்
உழவுத் தொழிலில் உற்ற தோழனாகவும், விவசாய்களின் ஏடிஎம் ஆகவும் விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள், நோய்கள் முலம் அவற்றின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். தக்க மருத்துவம் செய்யும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யும் உதவியே முதலுதவி ஆகும்.

கால்நடைகளுக்கான முதலுதவிகள்

1. காயங்கள்கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டால் முதலில் காயத்தை சுத்தமான நீரில் நோய்க்கிருமி எதிரியான டெட்டால் அல்லது சாவ்லான் கலந்து கழுவ வேன்டும். சுத்தமான துணியால் ஒற்றி எடுத்து டிங்ச்சர் அயோடின் அல்லது சல்பர்

இரணகள்ளி.



இரணகள்ளி.

மூலிகையின் பெயர் –: இரணகள்ளி.

தாவாரப்பெயர் –: EUPHORBIA.

தாவரக்குடும்பம் :– EUPHORBIACEAE.

பயன்தரும் பாகங்கள் –: பால் மற்றும் இலை.

வளரியல்பு –: கள்ளி இனங்ளில் 2008 வகைகள் உள்ளன.. கால்நடைகள் சாதாரணமாக இதைக் கடித்துச் சாப்பிடுவதில்லை. கள்ளிகள் பலவிதமான தோற்றங்கள், சிறு செடிமுதல் மரம் வரை வளரக்கூடியவை. பல வண்ண மலர்களுடன் காணப்படும். அழகுக்காக எல்லா நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதன் தோற்றம் சங்க காலத்திலும், ஜீலிசீசர் காலத்திலும் இருந்துள்ளது. அதனால் காலம் நிர்ணியிக்க முடியவில்லை.

கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான இடத்தில் போட்டால் அங்கும் செடி உண்டாகும். இது வரண்ட சமவெளிகளிலும் மலைகளிலும் தன்னிச்சையாக வளரக்கூடியது. தண்ணீரோ மழையோ தேவையில்லை.. காற்றிலுள்ள நீரைக் குடித்தே இது செழிப்பாக வளரும். இதன் இலை உடம்பில் பட்டால்

வேலிப்பருத்தி.


வேலிப்பருத்தி.

1) மூலிகையின் பெயர் -: வேலிப்பருத்தி.

2) தாவரப்பெயர் -: DAEMIA EXTENSA.

3) தாவரக்குடும்பம் -: ASCLEPIADACEAE

4) வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.

5) பயன் தரும் பாகம் -: இலை,வேர் முதலியன.

6) வளரியல்பு -: தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள்காணப்படும். இதனை உந்தாமணி என்றும்குறிப்பிடுவதுண்டு.காய்கள் காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்த்துப் பறந்து சென்று வேறு இடங்களில் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7) மருத்துவப்பயன்கள் -: இது நெஞ்சிலே இருக்கின்ற

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...