May 16, 2012

உங்கள் இதயம் மற்றும் கிட்னி சீராக வைக்க


25

இதயம் !

 பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.
உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

கட்டுப்படுத்தலாம் காசநோயை


காச நோய் வராமல் ஆரம்பத்திலேயேத் தடுக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில்தான், குழந்தை பிறந்ததும் பி.சி.ஜி. தடுப்பு ஊசி போடப்படுகிறது. ஆனால், இந்தத் தடுப்பு ஊசி எல்லாவிதமான காச நோய்களையும் தடுப்பது இல்லை. இந்தியாவில், 19 லட்சத்து 76 ஆயிரத்து 927 பேருக்கு காச நோய் பாதிப்பு இருப்பதாகக் கடந்த ஆண்டு (2011) கணக்கெடுப்பு சொல்கிறது. ''இந்தப் புள்ளிவிவரம் பயமுறுத்தக் கூடியதாக

செயற்கை கருத்தரிப்பு முறைகளும் சாத்தியக்கூறுகளும்! - ஒரு மருத்துவப் பார்வை



குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு வழங்கப்படும், உலக நாடுகளில் பிரபலமான செயற்கை கருத்தரிப்பு முறை, கருத்திசு வளர்ச்சி முறை, குறைந்த விந்து அணுக்கள் கொண்டவருக்கு விதைப்பையிலிருந்து அணுக்களை உறிஞ்சி செயற்கையாக செலுத்துவது, லேசர் முறையில் கருவை பொரிக்கச் செய்தல், கருமுட்டை தானம், வாடகைத்தாய் போன்ற பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் இந்தியா முழுவதிலும், குறிப்பாக

ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க !



ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும் எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பற்களை

ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து காய்கறிகள்!


உடலின் சக்திக்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின். இது தான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இவை குறைவாக இருந்தால் அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் ஏற்படும். இதனால் உடல் சோர்வடையும், முகம் வெளிறிப்போய்விடும்.

ரத்த சோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும்

குழந்தை ஆணா? பெண்ணா? இதப் படிங்க!



கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான்.

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு பெண் குழந்தையின் மீது விருப்பம் அதிகம். பெண் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா? உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது

கருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு!



கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது.

5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட

முகப்பருவா டீ பேக் போதுமே!



கோடை காலத்தில் எண்ணெயும், வியர்வையும் அதிகரித்து பருக்கள் ஏற்படுவது இயல்பு. அதை நகங்களினால் கிள்ளினால் அதிக ஆபத்து. அவை சீல்வைத்து புண்கள் வடுக்கலாக மாறி விடும். கோடைகால பருக்களைப் போக்க சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
டீ பேக் பேஸ்ட்.

சருமத்தில் ஏற்படும் கறுமையை போக்கவும், பருக்களை நீக்கவும் டீ டிகாசன் சிறந்த நிவாரணி. தேனீர் தயாரித்த பின்பு மீதம் இருக்கும் டிக்காஷனில்

நீரிழிவு நோயாளிகளுக்கு இனி நிம்மதி!: இரிசின் இருக்க பயமேன்!


நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது இரிசின் எனப்படும் திரவம். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமன் ஏற்படாமலும் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோ, குறைவதோ நீரிழிவு நோய்க்கு அடிப்படை காரணமாகிறது. நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அதனை குறைக்க வகை செய்யும் (ஹார்மோன்) நாளமில்லா

மாரடைப்பில் தடுக்க கூடியதும், தடுக்க முடியாததும்! - மருத்துவப்பார்வை!- வீடியோ!



மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் காரணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம்.

ஒன்று மாற்ற முடியாத காரணிகள் .அதாவது இயற்கையாகவே அமையப் பெற்ற காரணிகள் .இவற்றை நாம் மாற்ற முடியாது.உதாரணமாக ஆண்கள், வயதானவர்கள், இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டவர்கள் போன்றோரில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் சற்று அதிகம் ஆனாலும் இது சம்பந்தமாக நம்மால் எந்தவிதமான

Big Bellies & Heart Attacks - Health Awareness Lecture Series - Life Extension Videos - YouTube

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...