குழந்தை
இல்லாத தம்பதிகளுக்கு வழங்கப்படும், உலக நாடுகளில் பிரபலமான செயற்கை
கருத்தரிப்பு முறை, கருத்திசு வளர்ச்சி முறை, குறைந்த விந்து அணுக்கள்
கொண்டவருக்கு விதைப்பையிலிருந்து அணுக்களை உறிஞ்சி செயற்கையாக செலுத்துவது,
லேசர் முறையில் கருவை பொரிக்கச் செய்தல், கருமுட்டை தானம், வாடகைத்தாய்
போன்ற பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் இந்தியா முழுவதிலும், குறிப்பாக
தமிழ்நாடெங்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
குழந்தையில்லையே
என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். உங்களை போன்று தவிக்கும் பெற்றோர்களுக்கு
ஒரு வரப்பிரசாதமாகவே சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. பிந்திய
வயதுகளில் திருமணம் செய்வது என்பது இப்போதுள்ள சூழ்நிலையில்
சகஜமாகிவிட்டது. திருமணத்திற்கு முன் படிப்பு, தொழில் ஆகியவற்றுக்கு
முக்கியத்துவம் கொடுப்பதை தவறென்று சொல்ல முடியாது.
தவிர்க்கவும்
இயலாது. ஆனால் திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகளில் கருத்தரிப்பு நிகழவோ அல்லது
கருத்தரிப்புக்கான சாதாரண அறிகுறிகளோ தோன்றாத நிலையில் தகுந்த
மருத்துவர்களை அணுகுவது அவசியம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், சில
தகவல்களையும் அறிவுரைகளையும் பெற்றுக்கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்க
கூடியனவாக இருக்கும்.
ஐவிர்ப்
எனும் செயற்கை கருத்தரிப்பு முறையில் ஒரு பெண்ணின் கரு முட்டை பையில் பல
கரு முட்டைகளை உருவாக்கி, அவற்றை உறிஞ்சி, பின் அப்பெண்ணின் கணவரிடம்
இருந்து பெறப்படும் விந்துவை கலக்க செய்து உருவாக்கும் கருவினை செயற்கை
கருப்பை எனப்படும் சாதனத்தில் வைத்து வளர வைத்து, பின் இரண்டு மூன்று
நாட்கள் கழித்து பெண்ணின் கருப்பையினுள் செலுத்தும் முறையாகும்.
இதன்
மூலம் குழந்தை கிடைக்க 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை வாய்ப்புள்ளது.
பிளஸ்டோ சிஸ்ட் கல்ச்சர் எனப்படும் கருத்திசு வளர்ச்சி முறையில் வழக்கமாக
செய்யப்படும் சோதனை குழாய் குழந்தை முறையில் போல் அல்லாது, கருவானது, ஐந்து
நாட்கள் பெட்டியில் வளர்க்கப்பட்டு பின்னர் கருப்பையில் வைக்கப்படும்.
இயற்கையில்
முட்டையானது வெளிவந்தவுடன் கருவறை குழாயினுள் ஆணு உயிரணுக்களுடன் சேர்ந்து
கருவாக உருவாகும். அது பின்னர் பல மாற்றங்கள் அடைந்து, ஐந்தாம் நாள்
கருத்திசுவாக உருமாறி, கர்ப்பப்பையினுள் வளர்ந்து பின்னர் சிசுவாக மாறும்.
ஆகவே, கருத்திசு வளர்ச்சி, இயற்கையோடு ஒன்றிய ஒரு சிகிச்சை முறையாகும்.
எனவே
இதில் வெற்றி வாய்ப்பு 55 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை இருக்கிறது.
ஐவிஎப், ஐசிஎஸ்ஐ சிகிச்சைகள் தோல்வியடைந்த தம்பதியருக்கு இந்த சிகிச்சை
முறை உகந்தது. மிகக்குறைவான விந்தணுக்கள் கொண்ட அணுக்கள் தவிர போதுமான
உயிரணுக்கள் இருந்தும் விந்தணுக்களில் போதிய வேகத்தன்மை இல்லாதவர்களும்
ஐ.சி.எஸ்.ஐ. முறை மூலம் பயன்பெறலாம்.
ஆண்
விந்தில் அணுக்கள் இல்லாத போது விரைப்பையிலிருந்து உறிஞ்சி எடுத்தும்
செய்யப்படுகிறது. இதில் வெற்றி வாய்ப்பு 50 முதல் 70 சதவீதம் வரை உள்ளது.
கருவில் தோல் கெட்டியாக இருந்தாலோ, கருப்பையினுள் ஒட்டாமல் இருக்க
கர்ப்பப்பை தோல் தாராளமாக இருந்தாலோ கருவின் வெளிந்தோல் தன்மை
அதிகரிக்கலாம்.
இயற்கையிலேயே
கருமுட்டை குறைந்த அல்லது இல்லாத பெண்களுக்கும் மாதவிடாய் நின்று
கருமுட்டைகள் உருவாகாத பெண்களுக்கும் கரு முட்டை தானம் என்ற முறையில்
குழந்தையை உருவாக்க நவீன விஞ்ஞானத்தில் வாய்ப்புகள் உள்ளன. பெண்களில்
சிலருக்கு கருப்பை பலவீனம், பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமல் கருப்பை நோய்
தாக்குதல் ஏற்பட்டால் குழந்தை பிறக்க வழியில்லை.
இது
போன்ற பெண்களின் கரு முட்டையையும் அவரது கணவரின் விந்தணுவையும் செயற்கை
முறையில் இணைத்து கரு உருவாக்கி பின்னர் இதை மற்றொரு பெண்ணின் கருப்பையில்
செலுத்தி, கரு வளர்ந்து குழந்தை பெற வாய்ப்புகள் உள்ளன என்கிறார் டாக்டர்
ஜெயராணி.குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு வழங்கப்படும், உலக நாடுகளில்
பிரபலமான செயற்கை கருத்தரிப்பு முறை, கருத்திசு வளர்ச்சி முறை, குறைந்த
விந்து அணுக்கள் கொண்டவருக்கு விதைப்பையிலிருந்து அணுக்களை உறிஞ்சி
செயற்கையாக செலுத்துவது, லேசர் முறையில் கருவை பொரிக்கச் செய்தல்,
கருமுட்டை தானம், வாடகைத்தாய் போன்ற பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் இந்தியா
முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாடெங்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
குழந்தையில்லையே
என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். உங்களை போன்று தவிக்கும் பெற்றோர்களுக்கு
ஒரு வரப்பிரசாதமாகவே சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. பிந்திய
வயதுகளில் திருமணம் செய்வது என்பது இப்போதுள்ள சூழ்நிலையில்
சகஜமாகிவிட்டது. திருமணத்திற்கு முன் படிப்பு, தொழில் ஆகியவற்றுக்கு
முக்கியத்துவம் கொடுப்பதை தவறென்று சொல்ல முடியாது.
தவிர்க்கவும்
இயலாது. ஆனால் திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகளில் கருத்தரிப்பு நிகழவோ அல்லது
கருத்தரிப்புக்கான சாதாரண அறிகுறிகளோ தோன்றாத நிலையில் தகுந்த
மருத்துவர்களை அணுகுவது அவசியம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், சில
தகவல்களையும் அறிவுரைகளையும் பெற்றுக்கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்க
கூடியனவாக இருக்கும்.
ஐவிர்ப்
எனும் செயற்கை கருத்தரிப்பு முறையில் ஒரு பெண்ணின் கரு முட்டை பையில் பல
கரு முட்டைகளை உருவாக்கி, அவற்றை உறிஞ்சி, பின் அப்பெண்ணின் கணவரிடம்
இருந்து பெறப்படும் விந்துவை கலக்க செய்து உருவாக்கும் கருவினை செயற்கை
கருப்பை எனப்படும் சாதனத்தில் வைத்து வளர வைத்து, பின் இரண்டு மூன்று
நாட்கள் கழித்து பெண்ணின் கருப்பையினுள் செலுத்தும் முறையாகும்.
இதன்
மூலம் குழந்தை கிடைக்க 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை வாய்ப்புள்ளது.
பிளஸ்டோ சிஸ்ட் கல்ச்சர் எனப்படும் கருத்திசு வளர்ச்சி முறையில் வழக்கமாக
செய்யப்படும் சோதனை குழாய் குழந்தை முறையில் போல் அல்லாது, கருவானது, ஐந்து
நாட்கள் பெட்டியில் வளர்க்கப்பட்டு பின்னர் கருப்பையில் வைக்கப்படும்.
இயற்கையில்
முட்டையானது வெளிவந்தவுடன் கருவறை குழாயினுள் ஆணு உயிரணுக்களுடன் சேர்ந்து
கருவாக உருவாகும். அது பின்னர் பல மாற்றங்கள் அடைந்து, ஐந்தாம் நாள்
கருத்திசுவாக உருமாறி, கர்ப்பப்பையினுள் வளர்ந்து பின்னர் சிசுவாக மாறும்.
ஆகவே, கருத்திசு வளர்ச்சி, இயற்கையோடு ஒன்றிய ஒரு சிகிச்சை முறையாகும்.
எனவே
இதில் வெற்றி வாய்ப்பு 55 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை இருக்கிறது.
ஐவிஎப், ஐசிஎஸ்ஐ சிகிச்சைகள் தோல்வியடைந்த தம்பதியருக்கு இந்த சிகிச்சை
முறை உகந்தது. மிகக்குறைவான விந்தணுக்கள் கொண்ட அணுக்கள் தவிர போதுமான
உயிரணுக்கள் இருந்தும் விந்தணுக்களில் போதிய வேகத்தன்மை இல்லாதவர்களும்
ஐ.சி.எஸ்.ஐ. முறை மூலம் பயன்பெறலாம்.
ஆண்
விந்தில் அணுக்கள் இல்லாத போது விரைப்பையிலிருந்து உறிஞ்சி எடுத்தும்
செய்யப்படுகிறது. இதில் வெற்றி வாய்ப்பு 50 முதல் 70 சதவீதம் வரை உள்ளது.
கருவில் தோல் கெட்டியாக இருந்தாலோ, கருப்பையினுள் ஒட்டாமல் இருக்க
கர்ப்பப்பை தோல் தாராளமாக இருந்தாலோ கருவின் வெளிந்தோல் தன்மை
அதிகரிக்கலாம்.
இயற்கையிலேயே
கருமுட்டை குறைந்த அல்லது இல்லாத பெண்களுக்கும் மாதவிடாய் நின்று
கருமுட்டைகள் உருவாகாத பெண்களுக்கும் கரு முட்டை தானம் என்ற முறையில்
குழந்தையை உருவாக்க நவீன விஞ்ஞானத்தில் வாய்ப்புகள் உள்ளன. பெண்களில்
சிலருக்கு கருப்பை பலவீனம், பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமல் கருப்பை நோய்
தாக்குதல் ஏற்பட்டால் குழந்தை பிறக்க வழியில்லை.
இது
போன்ற பெண்களின் கரு முட்டையையும் அவரது கணவரின் விந்தணுவையும் செயற்கை
முறையில் இணைத்து கரு உருவாக்கி பின்னர் இதை மற்றொரு பெண்ணின் கருப்பையில்
செலுத்தி, கரு வளர்ந்து குழந்தை பெற வாய்ப்புகள் உள்ளன.
No comments:
Post a Comment