உலகில்
அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள்.
ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி
விடையும் தந்துள்ளனர்.20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000)
இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.
இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து
உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil
etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.
பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது.
உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 500,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா