பெங்களூர்:
தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கிளம்பிய பீதி காரணமாக, அசாம்
உள்ளிட்ட வடகிழக்கு மாநிலத்tதைச் சேர்ந்ததவர்கள் பெங்களூலிருந்து ஒரே
நாளில் வெளியேறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது ஆகஸ்ட் 20-ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது.
எஸ்.எம்.எஸ், இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை மூலம் இந்த வதந்தி வேகமா பரவியது.
இதனால் பீதியடைந்த வடகிழக்கு மாநிலத்தவர்கள்,உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்காக தங்கள் உடைமைகளுடன் ஒரே நேரத்தில் பெங்களூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
கிடைக்கிற ரயிலில் ஏறி எப்படியாவது சொந்த மாநிலத்துக்கு போய்விட வேண்டும் என்ற தவிப்பில் அனைவரும் இருந்தனர்.அலை அலையாய் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தை நேற்று இரவிலிருந்து முற்றுகையிட்டுக் கொண்டே இருந்தனர்.கவுகாத்தி செல்லும் ரயிலில் ஒரே நேரத்தில் கூட்டமாக ஏற முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.பலர் அவசர ஜன்னல் கதவு வழியாக உள்ளே ஏறிச் சென்றது பரிதாபமாக இருந்தது.இதில் பல பெண்களும் தங்களது கைக்குழந்தையுடன் இதேப்போன்று ஏறி உள்ளே சென்றது வேதனையை ஏற்படுத்துவதாக இருந்தது.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் தொடர்பு கொண்டு, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
இதனிடையே வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது.
















No comments:
Post a Comment