உடல்
மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால், வேப்பம்பூவை ஊறவைத்து
குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு
நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும்.
பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல்
இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து
எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது
விருத்தியும் பலமும் உண்டாகும்.
முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன்
சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில்
பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.
அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து, சிறிது தண்ணீர் சேர்த்து
அம்மியில் வைத்து மை போல அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து, காலை மாலை என
நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.
வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக்
கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி
சிறங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.
வேப்பம்பூ, நிலவேம்பு ஒரு அவின்ஸ் எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில்
1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்து விட்டு, இரண்டு மணி நேரத்திற்கு
பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலஹீனங்களும்
காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலஹீனங்களும்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா