Sep 7, 2012

காரசாரமான உணவு சாப்பிடுறவங்களா நீங்க

இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் காரசாரமான உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் உணவில் நல்ல சுவை மற்றும் மணம் வருவதற்கும் பல பொருட்களை சேர்க்கின்றனர். ஆனால் அப்படி காரமான உணவுகளை, சுவைக்காக அதிக மணமூட்டும் பொருட்களை சேர்ககும் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவரும் அறிவதில்லை. இவற்றையெல்லாம் உண்பதால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

உடல் பருமனை குறைக்க உடனடி தீர்வு!


உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.
எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.
மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.

அழகான கட்டுடலுக்கு ஏற்ற உணவுகள்

உடல் எடையை அதிகரித்துவிட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருவோம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன. ஏனெனில் தினமும் உடலில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்துவிடுவதோடு, ஆரோக்கியமாக வாழலாம். அதற்கான சரியான உணவுகள் என்னென்னவென்று மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளதை படித்து

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்


உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள்

Sep 6, 2012

மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க


உடலில் போதிய அளவு சத்துக்கள் இல்லாத காரணத்தினால், அடிக்கடி மயக்கம் வருவது போல் இருக்கும். அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த உணர்வு அதிகம் ஏற்படும். அதிலும் அவ்வாறு மயக்கம் தெருக்களில் நடந்து செல்லும் போது, காரை ஓட்டும் போது என்ற நேரத்தில் தான் வரும். ஆகவே அவ்வாறு மயக்கம் வருவது போல் இருந்தால், அந்த நேரத்தில் என்னவெல்லம் செய்தால், மயக்க நிலை போகும் என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேட்டு, பின்பற்றுங்களேன்…

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!


உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

இதயத்தை ஆரோக்கியமாக பேணும் உணவுகள்! – கட்டாயம் கவனிக்க வேண்டிய தகவல்!



தற்போது நிறைய பேர் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் முக்கியமான ஒன்று முறையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகள். அதாவது அதிக கொழுப்புகள் நிறைந்துள்ள உணவுகளை உண்பது, அவற்றை உண்ண வேண்டிய நேரத்தில் உண்ணாமல், கண்ட நேரத்தில் உண்பது என்பன. ஆகவே இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்க, உணவுகளில் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டும். அதற்காக இவற்றை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை, இந்த உணவுகளையும் தினமும் உணவில்

மூளையை பலப்படுத்தும் பாதாம் பருப்பு-

ஆப்பிள் போன்ற கன்னங்கள் வேண்டுமா?


ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம். ஆனால் அவ்வாறு ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும். சரி, இப்போது அந்த ஆப்பிள் சாப்பிட்டால்

முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா


முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும் என்பதற்காக தேய்த்து கழுவுவார்கள். அவ்வாறு செய்து, முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும். ஆகவே அத்தகையது வராமல், மென்மையாக இருக்க முகத்தில் இருக்கும் இறந்த செல்களை, அழுக்குகளை, கிருமிகளை நன்கு கழுவ, ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
கிளின்சர் : முகத்தை கழுவுவதற்கு முன்னால், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு சிறிது காட்டனை எடுத்து, கிளின்சரில் நனைத்துக் கொண்டு, முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும். ஆனால் அப்படி கிளின்சர் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு ஏற்றதாக பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் போன்று இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும். அதுவே எண்ணெய் சருமம் உள்ளவர்கள், வழுவழுப்பாக இருக்கும் கிளின்சரை பயன்படுத்த வேண்டும். அத்தகைய கிளின்சரை தினத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது முகத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெயையும் அகற்றிவிடும்.
தண்ணீர் : எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அதனால் முகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் குழிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிவிடும். பின் கழுவியதும் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எளிதில் போய்விடும்.
ஃபேஸ் வாஷ் : இதுவும் முகத்தை கழுவ பயன்படுத்தப்படும் பொருட்களுள் ஒன்று. அவ்வாறு கடைகளில் விற்கும் ஃபேஸ் வாஷ் வாங்கும் போது ஆல்கலைன் இருக்கும் பொருட்களை வாங்க வேண்டாம். மேலும் குளிக்கும் போது பயன்படுத்தியப் பின், அடிக்கடி முகத்தை கழுவும் போது முகத்திற்கு சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. அப்போது முகத்தை தண்ணீரால் நனைத்து, பின் அந்த ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்தி முகத்திற்கு தடவி, மசாஜ் போல் செய்து முகத்தை கழுவ வேண்டும். பின் முகத்தை சுத்தமாக துடைத்து விட வேண்டும். முக்கியமாக மசாஜ் செய்யும் போது 1-2 நிமிடம் வரை செய்யக்கூடாது.
ஃபேசியல் ஸ்கரப் : முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது அனைவரும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக, நீண்ட நேரம் செய்வர். ஆனால் அது மிகவும் தவறான செயல். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது, மிகவும் மென்மையாக 3-4 நிமிடங்களே செய்ய வேண்டும். அதுவும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே செய்ய வேண்டும். பின் கழுவி விட வேண்டும்.
இவ்வாறெல்லாம் முகத்தை கழுவினால் முகமானது அழகாக, பொலிவோடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...