தற்போது
நிறைய பேர் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் அதற்கு நிறைய
காரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் முக்கியமான ஒன்று முறையற்ற, ஆரோக்கியமற்ற
உணவுகள். அதாவது அதிக கொழுப்புகள் நிறைந்துள்ள உணவுகளை உண்பது, அவற்றை உண்ண
வேண்டிய நேரத்தில் உண்ணாமல், கண்ட நேரத்தில் உண்பது என்பன. ஆகவே இதயம்
நன்கு ஆரோக்கியமாக இருக்க, உணவுகளில் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டும்.
அதற்காக இவற்றை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை, இந்த
உணவுகளையும் தினமும் உணவில்
சேர்க்க வேண்டும்.
ஒரு சில ஆய்வில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதனை அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்கிறோம். முக்கியமான மனதில் வைத்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமானது என்று அளவுக்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும் உடலுக்கு தீங்கு தான். ஏன் ஆலிவ் ஆயில் கூட இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் அவற்றை அதிகமாக உணவில் சேர்த்தால், உடலில் கலோரிகளின் எண்ணிக்கை தான் அதிகரிக்கும். ஆகவே இப்போது எந்த உணவுகளை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!
இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்…
நட்ஸ்
தினமும் உணவில் நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும். அதிலும் வேர்க்கடலையை சற்று வறுத்து, சிறிது உப்பை சேர்த்து சாப்பிடலாம. இதனால் இதய நோய் வராமல் தடுக்கலாம். ஏனெனில் வேர்க்கடலையில் ஊட்டச்சத்துக்கள், செறிவூட்டப்படாத கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு துணையாக உள்ளன.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
எப்போதும் சாப்பிடும் போதும் ஒரு கப் பழங்களை சாப்பிட்டு, பின் உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் அவற்றில் பொட்டாசியம், வைட்டமின் சி (ஆன்டி-ஆக்ஸிடன்ட்) மற்றும் பைட்டேநியூட்ரியண்ட்ஸ் இருக்கிறது. அவை உடலில் ஏற்படும் கிருமிகளை எதிர்த்து போரிட சிறந்தது.
நார்ச்சத்து உணவுகள்
உண்ணும் உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உணவுகளான சிட்ரஸ் பழங்கள், ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், பேரிக்காய், முட்டைக்கோஸ், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்றவற்றை சேர்க்க வேண்டும். அதிலும் ஓட்ஸ் மற்றும் பார்லியில் பீட்டா-குளுக்கான் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.
ஒமேகா-3 உணவுகள்
ஒமேகா-3 உள்ள உணவுகளான சாலமன், டூனா, வால் நட்ஸ் மற்றும் ஆளிவிதை போன்றவற்றை தினமும் சிறிது உடலில் சேர்க்க வேண்டும். வேண்டுமென்றால் இந்த ஒமேகா-3 சத்தை க்ரில் காப்ஸ்யூலின் (krill capsule) மூலமும் பெறலாம்.
டீ
தினமும் இரண்டு முதல் மூன்று கப் கிரீன் அல்லது பிளாக் டீயை குடிக்க வேண்டும்.
டார்க் சாக்லேட்
சாக்லேட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆகவே அதனை தினமும் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் மட்டுமே சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் பின்னர் அதுவே உடலுக்கு நஞ்சாகிவிடும்.
ஆலிவ் ஆயில்
தினமும் உடலில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்க்க வேண்டும் ஏனெனில் ஆலிவ் எண்ணெயில் செறிவூட்டப்படாத கொழுப்புக்கள், வைட்டமின் ஈ, பாலிஃபீனால் போன்றவை இருக்கிறது. இதனால் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு அதிகமாகிறது.
ஆகவே, மேற்கூறிய உணவுகளையெல்லாம் சரியான அளவில் உடலில் சேர்த்து வந்தால, உடல் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் நினைவில் கொண்டு, உணவை உண்ண வேண்டும்

No comments:
Post a Comment