Sep 9, 2012

புதிய ஆலையை அமைக்க போர்ஸ் மோட்டார்ஸ் திட்டம்


புதிய ஆலையை உருவாக்க ரூ.1000 கோடியை முதலீடு செய்ய போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனையில் போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணி நிறுவனமாக உள்ளது. டெம்போ டிராவலர், போர்ஸ் ஒன் எஸ்யூவி, டிராக்ஸ் உள்ளிட்ட பயணிகள் வர்த்தக வாகனங்களையும், சிறிய மற்றும் நடுத்தர ரக சரக்கு வாகனங்களையும் அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், புதிய எம்பிவி கார் உள்ளிட்ட ஏராளமான புதிய வர்த்தக வாகனங்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்காக, உற்பத்தி திறனை வெகுவாக அதிகரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. தற்போது இரண்டு ஆலைகள் மூலம் வாகன உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் மூன்றாவது புதிய ஆலையை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய ஆலை உள்ளிட்டவைக்காக 1000 கோடி வரை முதலீ செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

வோக்ஸ்வேகன் குழுமம்: இந்தியாவில் ரூ.700 கோடி முதலீடு செய்ய திட்டம்


புதுடில்லி:ஜெர்மனியைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் குழுமம், இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 700 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது."தொழிற்சாலைகளை நவீனப்படுத்தி, வசதிகளை மேம்படுத் தவும், ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்வதற்காகவும், இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 700 கோடிரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என, இக்குழுமத்தின், தலைமை பிரதிநிதி (இந்தியா) ஜான் சாக்கோ தெரிவித்தார்.
வோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ், ஆடி, ஸ்கோடா, வோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயல் பட்டு வருகின்றன.

மொபைல் மூலம் கணினியில் இன்டர்நெட் இணைப்பை உருவாக்குவது எப்படி? இத படிங்க!


மொபைலில் உள்ள இன்டர்நெட் கனக்ஷனை கம்ப்யூட்டரில் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இதற்கு மொபைலில் உள்ள ஜிபிஆர்எஸ் கனக்ஷன் போதுமானது. இப்போது மொபைலில் இருக்கும் ஜிபிஆர்எஸ் வசதியை, கம்ப்யூட்டரில் பன்படுத்தும் வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு நோக்கியா மொபைலை உபயோகிக்கிறோம் என்று வைத்து கொள்ளலாம். முதலில் நோக்கியா பிசி சூட் என்ற சாஃப்ட்வேரை கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் டவுன்லோட் செய்து கொள்ள

அதிரடி வேகத்தில் கூகுளின் புதிய இன்டர்நெட் சேவை!

அதி வேகத்தில் செயல்படும் புதிய இன்டர்நெட் சேவையை அறிமுகம் செய்கிறது கூகுள் நிறுவனம்.
இந்த புதிய இன்டர்நெட் சேவையின் வேகம் குறித்த விஷயங்களை சோதனை செய்து பார்க்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் நகர குடியிருப்பு பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம் இந்த வசதி வழங்கப்படும்.
மற்ற இன்டர்நெட் வசதிகளை விடவும், கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய கூகுள் ஃபைபர் இன்டர்நெட் சேவை 100 மடங்கு வேகம் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த இன்டர்நெட் சேவையின் வேகம் அல்ட்ரா-ஹை ஸ்பீட் என்று சொல்லப்படுகிறது. இதனால் நிச்சயம் பல மடங்கு வேகத்தில்,

விண்டோஸ்-8 அக்டோபரில்…


புதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.
இந்த கண்காட்சி 12ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இயங்குதளம் கொண்ட பிசி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.
இந்த வேலைகள் ஓரளவு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது. இருப்பினும் கடைசிகட்ட வேலைப்பாடுகள் நடந்து வருகிறது. ஏனெனில் வாடிக்கையாளர்கள் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை பயன்படுத்தும்போது, மிக சிறப்பான பயன்பாட்டினை கொடுக்க வேண்டும்.
ஆகஸ்டு மாதம் இந்த விண்டோஸ் இயங்குதளம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மைக்ரோசாஃப்டின் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளம் 2,233 டாலர் இருக்கும் என்றும், விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 231 சர்வதேச சந்தைகளில் வெளியிட உள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவில் மழை வெள்ளம்: 100 பேர் பலி

சீனாவில் இது வரை சந்திக்காத பெரும் மழை வெள்ளத்தினால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலர் தங்களின் வீடுகளை இழந்து வீதிகளில் தவிக்கின்றனர். இயற்கை அழிவில் சிக்கி பாதிக்கப்பட்டோருக்கு மீட்க சீன அரசு சீரமைப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இது போன்ற மழை சீனாவில் பெய்தது இல்லை என்றும் 60 ஆண்டு கால வரலாற்றில் இது போன்ற மழை வெள்ளத்தை பார்த்ததில்லை என்றும் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
பீஜிங் அருகே பாங்ஷான் பகுதி பெரும் அளவில் பாதிப்புள்ளாகியிருக்கிது.

புகைப்பழக்கத்தை ஒரு மாதம் கைவிடுங்கள்: இங்கிலாந்து அரசு பிரச்சாரம்



புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரப் படம் ஒன்றுஇங்கிலாந்தில் புகைப்பழக்கம் உள்ளவர்களை இலக்குவைத்து ஒரு புதிய பிரச்சார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
'ஸ்டாப்டோபர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி 28 நாட்களுக்கு நடக்கிறது.

புதுமையான பிரச்சாரம்

புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒரு மாதத்துக்காவது புகைப் பழக்கத்தை

புதிய பரிணாமம்: வத்திக்கான் இதழில் பால்ட் பார்பி டோல்

புதிய பால்ட் பார்பி டோல் உருவாக காரணமான சமூக வலைத்தளங்களில் வெளியான படம்


புதிய பால்ட் பார்பி டோல் உருவாக காரணமான சமூக வலைத்தளங்களில் வெளியான படம்
வத்திக்கானில் பாப்பரசரின் அன்றாட பணிகள் மற்றும் அவரது சர்வதேச விவகாரங்களை வெளியிடுகின்ற அதிகாரபூர்வ செய்தி இதழான ஒஸ்ஸர்வேட்டோரி ரொமானோ வழமைக்கு மாறான வர்ணப் படமொன்றையும் கட்டுரையொன்றையும் அதன் கடந்த ஞாயிறு இதழின் முன்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பார்பி டோல் என்று அழைக்கப்படும் புதிய பாவை பொம்மையின் படம் தான் அது. இந்தப் புதிய பார்பி டோல் சிறார்களுக்கான மருத்துவமனைகளில் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.
தாய்மாரோ அல்லது குடும்பத்தில் உள்ள வேறு யாரோ புற்றுநோயால்

இந்தியாவில் பால் வளத்தை மேம்படுத்திய வெர்கீஸ் கூரியன் காலமானார்

டாக்டர் கூரியன்
டாக்டர் கூரியன்
இந்தியாவுடைய வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வெர்கீஸ் கூரியன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 90.
பால் உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருந்த இந்தியாவை, தன்னிறைவு காண வைத்ததோடு உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளர் என்ற நிலைக்கு கொண்டுவந்த பெருமை டாக்டர் கூரியனுக்கு உண்டு.

இந்தியாவிலேயே மிக உயரமான குடும்பம் இதுதான்



உலகிலேயே உயரமான குடும்பம் என்ற உலக சாதனையை படைத்துள்ளனர் பூனே ஐ சேர்ந்த இந்தியாவின் குடும்ப அங்கத்தவர்கள்.
குடும்ப தலைவரான ஷராட் குல்கர்னி (வயது 52) 7 அடி 1.5 இஞ்ச், குடும்ப தலைவி ஷஞ்யொட் (வயது 46) 6 அடி 2.6 இஞ்ச், மற்றும் இவர்களின் மகள்மாரான 2 வயதாகும் ம்ருகா (6 அடி 1 இஞ்ச்), 16 வயதாகும் ஷன்யா (6 அடி 4 இஞ்ச்) ஆகியோரே இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

சீனாவில் இன்று பூகம்பம்! 10,000 வீடுகள் சேதம், 1 லட்சம் பேர் வெளியேற்றம்!!

, Friday 07 September 2012,



1 லட்சம் பேர் வெளியேற்றம்!
சீனாவில் அடுத்தடுத்த இரு தடவைகள் பூகம்பம் ஏற்பட்டதில், குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டனர். 700 பேர் காயமடைந்தனர், 20,000 வீடுகள் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
சீனாவில் யுனான் மற்றும் குய்ஸோ மாகாணங்களின் எல்லையருகே இன்று 0319 GMT நேரம் முதலாவது பூகம்பம் ஏற்பட்டது எனவும், 45 நிமிடங்களின் பின் அடுத்த பூகம்பம் தாக்கியது எனவும், அமெரிக்க ஜியோலோஜிகல் சர்வே தலைமையகத்தில் பதிவாகியுள்ளது. இரு பூகம்பங்களும், 5.6 magnitude அளவில் சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளன.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...