Sep 9, 2012

வோக்ஸ்வேகன் குழுமம்: இந்தியாவில் ரூ.700 கோடி முதலீடு செய்ய திட்டம்


புதுடில்லி:ஜெர்மனியைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் குழுமம், இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 700 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது."தொழிற்சாலைகளை நவீனப்படுத்தி, வசதிகளை மேம்படுத் தவும், ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்வதற்காகவும், இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 700 கோடிரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என, இக்குழுமத்தின், தலைமை பிரதிநிதி (இந்தியா) ஜான் சாக்கோ தெரிவித்தார்.
வோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ், ஆடி, ஸ்கோடா, வோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயல் பட்டு வருகின்றன. இக்குழுமத்திற்கு, மகாராஷ்டிராவில் உள்ள சக்கான் மற்றும் அவுரங்காபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் கார் உற்பத்தி திறன், நடப்பு நிதியாண்டில், 10-15 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம், கடந்த ஆண்டில், 1.11 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது, நடப்பு 2012ம் ஆண்டில்,10-12 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இக்குழுமம், மகாராஷ்டிராவில் அதன் தொழிற் சாலைகளின் விரிவாக்கத் திட்டத்திற்கு, 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், மாநில அரசின் கொள்கை தொடர்பான பிரச்னைகளால், அத்திட்டம் நிலுவையில் உள்ளது என, சாக்கோ மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...