Sep 19, 2012

மனித நுரையீரல் பற்றிய தகவல்கள்:-



மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயுப் பரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வதும் இதன் மற்ற பணிகளாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிஜனை உள் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன்-டை- ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக

மனித உடலில் அல்சர் நோய் என்றால் என்ன?



நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்
அல்சர் வர கரணங்கள்:-

இஞ்சி மருத்துவ குணங்கள்:

இஞ்சி மருத்துவ குணங்கள்:-

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
இஞ்சியை உணவில் சேருங்கள்:
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இஞ்சியை, தட்டி தேனீர் கொதிக்க வக்கும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து தேனீர் பருகலாம். சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது.
சில சமையல் வகைகளில் இஞ்சியை மசித்துப் போட்டு செய்வார்கள். அதுபோன்ற உணவு வகைகள் வயிற்றைக் கெடுப்பதில்லை

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள்

பார்வை குறைபாட்டை சரிசெய்யும் பால்



பால் அதிகம் பருகுவதால் பார்வைக்கு பலம் அதிகரிக்கும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு(ஏ.எம்.டி) பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

உடல் எடையை குறைக்கும் தயிர்



தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும்.

தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உணவு வகைகள்



இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று.

எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய் இந்த சர்க்கரை நோயே.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு

என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு
****************************************
ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம்.

ஆனால் அவ்வாறு ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும்.

ஏனெனில் இதில் உள்ள ஆன்டி- ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும்.

1. ஆப்பிளை சாப்பிட்டால் சுருக்கங்கள் உண்டாவதை தடுக்கலாம். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி- ஏஜிங் பொருள் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்கும்.

மேலும் இறந்த செல்களை நீக்கி, பொலிவான தோற்றத்தை கொடுக்கும். அதிலும் இந்த பேஸ்ட்டை முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் பளிச்சென இருக்கும்.

2. மேலும் இது ஒரு சிறந்த கிளின்சர். இந்த பழத்தில் உள்ள அமிலத்தன்மை, முகத்தில் இருக்கும் தேவைக்கு அதிகமான எண்ணெய் பசையை நீக்கும்.

அத்தகைய ஆப்பிள் கிளின்சரை செய்ய, முதலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஆப்பிளின் மகிமை, இதன் முடிவில் நன்றாக தெரியும்.

3. ஆப்பிளை வைத்து மாஸ்க் செய்தால், அதைவிட நன்றாக இருக்கும். ஏனெனில் அப்போது ஆப்பிளில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நேரடியாக உடலில் செல்லும்.

அந்த மாஸ்க் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

4. ஆப்பிளானது பிம்பிள் மற்றும் முகத்தில் இருக்கும் கொப்புளங்கள், புண் போன்றவை நீக்கும். அதற்கு அதனை மாஸ்க் போல் செய்ய வேண்டும். அதற்கு ஆப்பிள் துண்டுகளை, முகத்தில் தேய்க்க வேண்டும். இல்லையென்றால் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10-15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.

5. முக்கியமாக ஆப்பிள் ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் பொருள். இது சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும். அதற்கு தினமும் குளிக்கும் முன், ஆப்பிள் சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்கவும்.

இவ்வாறெல்லாம் செய்தால் முகமானது பளிச்சென்று இருப்பதோடு, பொலிவாக இருக்கும்.
ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம்.

ஆனால் அவ்வாறு ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும்.


ஏனெனில் இதில் உள்ள ஆன்டி- ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும்.

1. ஆப்பிளை சாப்பிட்டால் சுருக்கங்கள் உண்டாவதை தடுக்கலாம். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி- ஏஜிங் பொருள் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்கும்.

முகம் பொலிவு பெற…



அரை டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறுடன், சிறிது பால் சேர்த்து, அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து அரைமணி நேரம் வைக்கவும். பிறகு, இதை இரவு படுப்பதற்கு முன், முகத்தில் நன்றாகப் பூசிவிடவும். காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களில் நீங்களே வியக்கும்படி உங்கள் முகம் பொலிவு பெறும்.

* நன்றாக பழுத்த தக்காளியில் சாறெடுத்து, முகத்தில் பூசி அரைமணி நேரம் உலரவிடவும். பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வர, முகம் சிறிது சிறிதாக, நல்ல நிறத்தை அடையும். முகம் மட்டுமின்றி, கழுத்து, கை ஆகிய இடங்களிலும் தடவலாம். இவ்வாறு செய்தால், வெயிலால் ஏற்படும் கருமை குறையும்.

* வெள்ளரிக்காய் சாறெடுத்து முகத்தில் தடவி 20 நிமிடம் உலரவிட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளபளப்பு பெறும். தோலின் ஆரோக்கியத்திற்கு வெள்ளரிக்காய் மிகச் சிறந்த டானிக்.

* பாதாமை அரைத்து பால் ஏட்டுடன் சேர்த்து, சில துளிகள் பன்னீர்விட்டு முகத்தில் தடவ வேண்டும். அரைமணி நேரம் உலரவிட்டு, பின் கழுவினால், முகம் பளிச்சென்று ஆகிவிடும். இதைத்தொடர்ந்து செய்து வந்தால், முகச்சுருக்கம் என்றால் என்னவென்று கேட்பீர்கள்.

*தயிர் கூட மிகச் சிறந்த அழகு சாதனம் தான். முகத்தில் தயிரை தொடர்ந்து தடவி வர, முகம் பிரகாசமாக இருக்கும். கடலைமாவுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி அரைமணி நேரம் உலரவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகம் பொலிவு பெறும்.

* வறண்ட சருமம் மற்றும் முகச்சுருக்கம் உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் பார்லி பவுடர், அரை ஸ்பூன் வெள்ளரி ஜூஸ், ஐந்து துளி தேன் ஆகியவற்றை கலந்து தடவினால், தோலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். தோலும் மிருதுவாகும்.

* முகம் வறட்சியாகக் காணப்படுகிறதா? பால் ஏட்டில் சில துளி எலுமிச்சம் பழச்சாறு கலந்து, முகத்தில் தடவி, உலர்ந்ததும் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்கள் செய்து வர வறட்சி மறையும்.

* பால் அல்லது வெண்ணெயை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்த்து, 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின், சிறிதளவு கடலைமாவு, அரிசிமாவு, பன்னீர், ஆரஞ்சு ஜூஸ் சில துளிகள் சேர்த்து முகத்தில் தடவி அரைமணி கழித்து கழுவ முகம் பளபளக்கும்.

* பைனாப்பிள் ஜூஸ் உடன் சிறிது கிளிசரின் சேர்த்து அரை மணி நேரம் உலர விட வேண்டும். பின், முகத்தை கழுவினால் வெயில் காரணமாக முகத்தில் ஏற்படும் கருமை நீங்கும்.

சீனா-ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை



பெய்ஜிங், செப்.19-
ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எண்ணெய் வளம் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் இந்த நாடுகளுக்கு இடையே நெடுங்காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பற்றி சீனா சென்றுள்ள அமெரிக்க ராணுவ மந்திரி லியோன் பானட்டா கருத்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பெரிய மோதல்களாக, கலவரங்களாக வெடிக்கும் ஆபத்து உள்ளது. இதில் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது, சீனா தான் அனுபவித்த வேதனைகளை நினைத்துப்பார்க்கிறது. அதே நேரத்தில் நாம் கடந்த காலத்தை நினைத்துக்கொண்டு வாழ்ந்து விட முடியாது என்றார். 19.9.2012 6.35 PM

Sep 18, 2012

50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும் சிவகங்கையில் விஞ்ஞானி கருத்து








சிவகங்கை:""அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில் உலகில் 20 நாடுகள் வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும்,'' என, மாநில சுற்றுச்சூழல் கல்வி மைய பொறுப்பு விஞ்ஞானி ராம்ஜி, சிவகங்கையில் பேசினார். "கால நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி பணிமனை' பயிற்சியில், அவர் பேசியதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய அரசு, "பரியாவரன் மித்ரா' திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டம் குறித்த கருத்துக்கள், ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு சேர்க்கப்படுகின்றன. அதிகமான கரியமில வாயு வெளியேற்றத்தால், காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.


பன்னாட்டு ஆய்வுக் குழுவின் அறிக்கைப்படி, 50 அல்லது 100 ஆண்டுகளில், உலகில், 20 நாடுகள், வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. இந்தியா உட்பட 16 நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், இதில் அடங்கும். கடந்த 200 ஆண்டுகளில், உலகளவில், 1.5 செல்சியஸ் வெப்பமும், 20 செ.மீ., கடலரிப்பும் அதிகரித்துள்ளன.

உறை பனியின் உருகும் நிலை அதிகரித்து வருவதால், இமய மலையை நம்பியுள்ள, 20 கோடி மக்கள் பாதிக்கப்படலாம்.காலநிலை மாற்றத்தை சீராக்க, கார்பன்- டை- ஆக்சைடு பயன்பாட்டை குறைக்க வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தி, நிறைய மரங்கள் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளிலிருந்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காடுகள் அழிப்பை தடுக்கவும், அதிகளவு வாகன பயன்பாட்டை குறைக்கவும், வலியுறுத்த வேண்டும்.இல்லையெனில், எதிர்காலத்தில் பெருமளவில் விவசாயம் பாதித்து, மக்கள் உணவுக்கு கஷ்டப்படும் நிலை உருவாகலாம்.
இவ்வாறு பேசினார்.

டிசம்பருக்குள் உலகம் அழியும் பீதி கிளப்புகிறார் உமாசங்கர்

ஆத்தூர் : ""இன்னும் மூன்று மாதங்களில் உலகம் அழியும்,'' என, தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணைய கமிஷனர் உமாசங்கர் பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, அண்ணா கலையரங்கில், கிறிஸ்தவ போதகர்கள் சார்பில், "2012ம் ஆண்டு வரப்போகும் அழிவில் இருந்து தப்பிப்பது எப்படி' என்பது குறித்து, கிறிஸ்தவ மத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணைய கமிஷனர் உமாசங்கர் பங்கேற்று பேசியதாவது:இந்த ஆண்டு, டிசம்பர் மாதம், உலகின் பெரும் பகுதி அழிவை சந்திக்க உள்ளது. சுனாமி, சூரிய புயல், விண்கற்கள் விழுதல் போன்ற இடர்ப்பாடுகளில், ஏராளமானோர் இறந்து விடுவர். நிலத்தின் ஒரு பகுதி கடலாக மாறி விடும், கடற்கரை நகரங்கள், 15 கி.மீ., வரை அழிவை சந்திக்கும்.அவ்வாறு, ஆண்டவர் வரும் நாளில், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படும். கிறிஸ்தவர்கள், வீட்டில் வைத்துள்ள ஜாதகங்களை, தீயிட்டு கொளுத்துங்கள், குப்பையில் வீசியெறியுங்கள். ராகு காலம், எமகண்டம் குறிப்பிட்டுள்ள காலண்டர்களைக் கூட எரித்து விடுங்கள். ஜாதகங்களை நம்ப வேண்டாம். இவ்வாறு உமாசங்கர் பேசினார்.பின்னர், அவர், நிருபர்களிடம் கூறுகையில், ""கிறிஸ்தவர்களிடம் மட்டும், கிறிஸ்தவ மதக் கருத்துக்களைக் கூறுகிறேன். அரசு பணியை தொய்வு இல்லாமல் செய்கிறேன். பா.ஜ.,வினர், அரசியல் சாசனச் சட்டம் தெரியாமல் பேசுகின்றனர். என் மீது, பா.ஜ.,வினர் புகார் செய்தாலும், கற்களை வீசினாலும் தாங்கிக் கொள்வேன்,'' என்றார். பா.ஜ., மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கூறுகையில், ""ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர், கிறிஸ்தவ மத மாற்ற முயற்சிகளில் ஈடுபடுவது, சட்ட விரோதமானது. அவர் மீது, விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவரது கிறிஸ்தவ மதப் பிரசாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, புகார் செய்துள்ளோம்,'' என்றார்.


Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...