Sep 19, 2012

சீனா-ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை



பெய்ஜிங், செப்.19-
ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எண்ணெய் வளம் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் இந்த நாடுகளுக்கு இடையே நெடுங்காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பற்றி சீனா சென்றுள்ள அமெரிக்க ராணுவ மந்திரி லியோன் பானட்டா கருத்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பெரிய மோதல்களாக, கலவரங்களாக வெடிக்கும் ஆபத்து உள்ளது. இதில் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது, சீனா தான் அனுபவித்த வேதனைகளை நினைத்துப்பார்க்கிறது. அதே நேரத்தில் நாம் கடந்த காலத்தை நினைத்துக்கொண்டு வாழ்ந்து விட முடியாது என்றார். 19.9.2012 6.35 PM

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...