Oct 7, 2012

பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது

290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. கப்பல்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இன்று கோவா கடற்கரை‌‌‌‌யை ஒட்டிய கப்பல்படைத் தளத்தில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து இந்த பிரம்மோஸ் ஏவுகணையைத் தயாரித்துள்ளன. 8.4மீ நீளம், 3 ஆயிரம் கிலோ எடை கொண்டது இந்த ஏவுகணை. இது ஒலியைவிட வேகமாகச் செல்லும் திறன் பெற்றது.
கடந்த 2006ல் பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் முப்படையிலும் பிரமோஸ் ஏவுகனைகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.

தேனீ வளர்க்கும் ராணித்தேனீ!


‘‘பிள்ளைங்க பள்ளிக்கூடம் போற அளவுக்கு வளந்துட்டாங்க. வீட்டுல பெரிசா எந்த வேலையும் இல்லை. ஏதாவது செய்யலாமேன்னு தோணுச்சு. கூடுதலா 2 ஆயிரம் வருமானம் வந்தா அவருக்கு உதவியா இருக்கும். எங்காவது வேலை இருக்குமான்னு பத்திரிகைகள்ல ‘வேலைக்கு ஆள் தேவை’ விளம்பரங்களை பாத்துக்கிட்டு இருந்தப்போதான், மதுரை வேளாண் அறிவியல் மையம் தேனீ வளர்ப்பு பயிற்சி கொடுக்கிறதா செய்தி இருந்துச்சு. விளையாட்டா அந்த பயிற்சிக்குப்

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு! உணவே மருந்து


பெற்றோர் சொல்வதே வேதம்... வீடுதான் உலகம் என்றிருந்த பிள்ளைகளுக்கு, டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும், காட்சிகளும் கனவுகளும் மாற ஆரம்பிக்கின்றன. உடலும் மனதும் புரியாத புதிர்களாகின்றன. அந்தரங்கம் பற்றிய ஆர்வம் தலை தூக்குகிறது. அழகைப் பற்றிய தேடல் அதிகமாகிறது. டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிற ஆண், பெண் பிள்ளைகளின் சிந்தனை, செயல், புறத்தோற்றம், ஆரோக்கியம் என எல்லாவற்றையும் தீர்மானிப்பதில், அந்த வயதில் அவர்கள் உட்கொள்கிற உணவுகளுக்கே

எய்ம்ஸ் திடுக்கிடும் தகவல் அங்கீகாரம் இல்லாத மருந்துகளை நோயாளிகளுக்கு தரும் டாக்டர்கள்


புதுடெல்லி: நோயாளிகளுக்கு பல்வேறு மருந்துகளை டாக்டர்கள் தேவையின்றி கொடுக்கின்றனர். அதேபோல் பரிசோதனைகளும், ஆபரேஷன்களும் செய்யப்படுகின்றன என்று எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.எய்ம்ஸ் டாக்டர் காமேஸ்வர் பிரசாத் கூறுகையில், ‘‘டாக்டர்கள் தேவையின்றி நோயாளிகளுக்கு பல பரிசோதனைகளை செய்யும்படி பரிந்துரை செய்கின்றனர். அதேபோல், திறன் குறைந்த, அங்கீகரிக்கப்படாத மருந்துகளை அவர்களுக்கே போதிய விவரம் தெரியாமல் நோயாளிகளுக்கு பரிந்துரை

அமெரிக்க அதிபர் தேர்தல்நேருக்கு நேர் விவாதத்தில் ஒபாமாவை மிஞ்சினார் ரோம்னி



டென்வர் : அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நேற்று நடந்த நேருக்கு நேர் விவாதத்தில், அதிபர் பராக் ஒபாமாவை குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி முந்தியுள்ளார். அமெரிக்காவில் 1960ம் ஆண்டு முதல் அதிபர் தேர்தல் நடக்கும் போது, வேட்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்தில் நேருக்கு நேர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறுவார்கள். 3 முறை இதுபோன்ற விவா தம் நடக்கும். இதில் சிறப்பாக கருத்துக்களை முன் வைக்கும் வேட்பாளருக்கு உடனடியாக மக்கள் ஆன்லைன் மற்றும் போனில்

அமெரிக்க செய்தி 1 மில்லியன் வோல்ட் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி சாதனை படைத்த நபர் (வீடியோ இணைப்பு)






அமெரிக்காவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் ஒருவர் தனது உடலில் 1 மில்லியன் வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பிளேன் (வயது 39). மேஜிக் நிபுணரான இவர், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் 10 லட்சம் வோல்ட் மின்சாரத்தை தனது உடலில் பாய்ச்சி சாதனை நிகழ்த்தப் போவதாக அறிவித்திருந்தார்.
இச்சாதனை நிகழ்ச்சி நியூயார்க் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக மிகப் பெரிய கூண்டு அமைக்கப்பட்டது. அதன் நடுவில் 20 அடி

David Blaine begins 'Electrified' stunt in New York

துபாயில் உருவாகும் தாஜ்மஹால்



ஐக்கிய அரபு நாடான துபாயில் ஒரு பில்லியன் டொலர் செலவில் இந்திய தாஜ்மஹலையொத்த கட்டடமொன்றை கட்ட அந்நாடு தீர்மானித்துள்ளது.உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ்மஹால் புதுடெல்லி ஆக்ராவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் தாஜ்மஹாலையொத்த தாஜ் அராபியா என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டடம் 300 அறைகளைக் கொண்ட ஹோட்டல், வர்த்தக கட்டடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
இந்த தகவலை தாஜ் அராபியா கட்டடத்தை நிர்மாணிக்கும் அருண் மெஹ்ரா தெரிவித்தார்.
‘புதிய காதல் நகரம்’ ௭ன அழைக்கப்படவுள்ள இந்த கட்டடம் எதிர்வரும் 2014ம் ஆண்டு திறந்து வைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த கட்டடத் தொகுதியானது ஈபிள் கோபுரம், பிரமிட்டுக்கள், சீனப்

பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்ந்து விரைவில் காங்கிரஸ் சீர்திருத்தம்!


Economic Reforms On Congress Political Reforms Offing அடுத்த சில வாரங்களில் மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. ராகுல் காந்திக்கு முக்கியமான பதவி கிடைக்கலாம். அதே போல ஆந்திரா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முதல்வர்களும் மாற்றப்படலாம் என்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளையும் 2ஜி, நிலக்கரி விவகாரங்களுக்கு பதில் சொல்லி, தற்காப்பு நிலையிலேயே கடந்துவிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க் கட்சிகளுடன் நேரடியான தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
இதனால் தான் கடந்த இரு ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிரேக் போட்டு வந்த சோனியா,

ஐபோன்களை தீயில் போட்டுக் கொளுத்துங்கள்.. யூதர்களுக்கு மத குரு கட்டளை


 Burn Your Iphones Israeli Rabbi Followers

ஜெருசலேம்: இஸ்ரேலிய மத குரு ஒருவர் ஐபோன்களை யாரும் பயன்படுத்த வேண்டாம், வாங்க வேண்டாம், ஒருவேளை வாங்கியிருந்தால் அதை தீயில் போட்டு கொளுத்தி விடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக யூத மதத்தின் பழமைவாதப் பிரிவைச் சேர்ந்த மத குரு ரபி சயிம் கனிவெஸ்கி என்பவர் யூத நாளிதழான யாதேத் நீமன் என்ற பேப்பரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் யூத மதக் கோட்பாடுகளை மீறுவதாக உள்ளது. அதை யூதர்கள் பயன்படுத்தக் கூடாது, வாங்கக் கூடாது, வாங்கி விட்டால் அதை தீயில் போட்டுக் கொளுத்தி விடுங்கள் என்று

ஈரான் தாக்கப்பட்டால் இஸ்ரேல் மட்டுமல்ல அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்: ஹிஸ்புல்லா


 Hezbollah Leader Says His Group Has Chemical Weapons பெய்ரூட்: ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை மட்டுமல்ல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகள் மீதும் அந்நாடு தாக்குதல் நடத்த முடிவு செய்திருக்கிறது என்று லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.
லெபனான் நாட்டு தொலைக்காட்சி அல்- மைதீனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக அமெரிக்க ராணுவ தளங்கள் மீது அந்நாடு தாக்குதல் மேற்கொள்ளும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இஸ்ரேல்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...