Oct 11, 2012

கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி


இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள் ஆய்வு -அடையாளம் செய்முறை   விபரம் -பாகம்- 2

புலியடி மூலி

கொல்லிமலை கிரிகை அரியலாம், புலியடி மூலி விபரம் சொல்லக் கேளு அரப்பளீசுவர் கோவிலுக்குப் பின்புறமாய் தென்கிழக்கு மூலையில் வழியே ஒரு நாழிகை தூரம் போனால் அங்கே ரெட்டைக்குண்டு மேடு உள்ளது. அது ரெட்டைக்குண்டு ஓடையென்று சொல்லப்படும்.

அந்த மேட்டில் முலைத்ததெல்லாம் புலியடி மூலிதான் அது குத்துச்செடி போல் முளைத்து ஒரு முள உயரமாயிருக்கும் செடி சுற்றிலும் கிளைகள் படர்ந்து பூமியில் சுற்றி படாந்துயிருக்கும். இலைகள் புலிப்பாதம் போல் இருக்கம். இலையைத் திருப்பிப் பார்த்தால் புலியைப் போலவே சாரை சாரையாய் கோடுகள் இருக்கும் இந்த இலை வெள்ளை, பச்சையாய் இருக்கும்.

இந்த இலையைப் பறித்து சாறு பிழிந்து கொண்டு, இரும்பைத் தகடு தட்டி சுருட்டி பழுக்கக் காய்ச்சி சாற்றில் மூன்றுமுறை துவைக்க (சுருக்கு கொடுக்க) செல்லு அரித்தது போல் இருக்கும் மீண்டும் மூன்றுமுறை சுருக்கு கொடுக்க இரும்பு தகடு கொஞ்சம் சிவந்து இருக்கும் அதை எடுத்துக்கொண்டு வெட்டி மூசையில் போட்டு வெங்காரம் கொடுத்து உருக்கி எடுத்து

நோய்கள் தோன்றும் விதம் , நோயனுகா விதி


தன் மனையாலுந் தானுமிருக்கையில்
தாவி வேறுமனை தேடிப்புகுந்தாலும்
நன் மனைவியின் போகமிகுந்தாலும்
நல்லுனவென்றதிகம்  புசித்தாலும்
வன்மையாகக் குறைத்துப் புசித்தாலும்
மாலையி லெண்ணெய்முழுகி குளித்தாலும்
சின்னமா மலச்சிக்க லிருந்தாலும்
தேடிப்பாரில் வியாதிகள் வருமே
யாகோபு வைத்தியம் -300

தனக்குத் துணையாகிய மனைவியை விட்டு வேறு பெண்களிடம்  தொடர்பு கொண்டாலும்,தன் மனைவியிடம் அதிகம் போகம் கொண்டாலும்,ருசியான உணவு வகைகளை அதிகம் உண்டாலும்,காலம் தவறி உணவுகளை குறைத்து உண்பதாலும்,மாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி குளித்தாலும்,மலச்சிக்கல் இருந்தாலும் அவர்களுக்கு வியாதிகள் தேடி வரும்

இவைகள் மட்டும் அல்லாமல் உடலில் வாதம்,பித்தம்,கபம் என்ற மூன்று வித நாடிகளின் வேறுபாடுகளாலும்,இயற்கையின் கால சூழ்நிலைகளின் வேறுபாடுகளாலும்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் நோய்கள் வரும்.

---------------------------------------------------------------------------------------

நோயனுகா விதி
நாளி ரண்டு
வாரமிரண்டு
மாதமிரண்டு
வருடமிரண்டு
என்பது சித்தர்கள் வகுத்த மருத்துவ மொழியாகும்

நாளிரண்டு  :   ஒவ்வொரு நாளும் இருமுறை மலம் கழிக்க வேண்டும்.
வாரமிரண்டு : வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
மாதமிரண்டு:மாதம் இருமுறை மட்டும் உடல் உறவு கொள்ள வேண்டும்.
 வருடமிரண்டு:ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டு வயிற்றை சுத்தம் செய்யவேண்டும்.

இவற்றை கடை பிடித்தால் நோய்கள் உடலில் தோன்றாது.இவைகள் மட்டும் இல்லாமல் கர்ம வினைகளாலும் நோய்கள் தோன்றும் என்று அகத்தியர் பெருமான் கூறுகின்றார்.அதைப் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி!
இமயகிரி சித்தர்  

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்


உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன.அதில் -246-வகை
பாம்புகள் இந்தியாவில் உள்ளன.அயர்லாந்து,நியூசிலாந்து,ஆர்ட்டிக்
போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள்
காணப்படுகின்றன.
பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது
சில வகைப் பாம்புகளைத் தவிர  பெரும்பான்மையான பாம்புகள் விஷ 
மற்றவையே.இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப்
பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,
1.நல்ல பாம்பு  - 2.கட்டு வீரியன்- 3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு - 5.கரு நாகம் - 6. ராஜ நாகம்.
மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில்
பெருமளவு காணப்படுகின்றன.பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்


பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் 


கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் உலகோர்க்

கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு

வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் 

அணுகாது குடியோடிப்போம் நன்றான நாகதாளிக் கிழங்கு 

தானும் நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா அன்றான 

ஆகாசகருடன் மூலி அம்மனையிலிருக்க விடமற்றுப்போம் 

ஹலோ டாக்டர்,
1.உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வதால் இருதயத்திற்கு நல்லதா?
உப்பு ஊறுகாய் அப்பளம் வடகம் போன்றவற்றை சாப்பிடுவது தவறா? - திருமதி .உமா சண்முகம் (ஈரோடு)

டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம்
புதுவருடப் பிறப்பு, பொங்கல் என்று பல விடுமுறைகளும் விழாக்களும் நிறைந்துள்ள நேரத்திற்கு பொருத்தமான கேள்வி. நாம் உண்ணும உணவானது நமக்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு, உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களையும் (மினரல்ஸ்) அளிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மினரல் தான் நாம் தினமும் எல்லாவற்றிலும் உபயோகப்படுத்தும் உப்பு. சோடியம் க்ளோரைட் (Sodium Chloride) எனப்படும் உப்பு, சுவைமட்டும் அளிக்கும் ஒரு பொருள் அல்ல. அது


இருதய நோய் வல்லுநர் – டாக்டர். ஸ்ரீதர் ரத்தினம்
மதுசூதனன் – சென்னை.
ஹலோ டாக்டர்
இரத்த நாளங்களில் (blood vessels) 60% அடைப்பு இருந்தாலும் ஆப்பரேஷன்(operation) அவசியமா?இல்லை மருந்து மாத்திரையிலேயும் டயட்டிலேயும் சரி பண்ணிவிடலாமா?

இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. நான் முன்பே கூறியதுபோல் மற்ற முக்கிய உறுப்புகள் இரண்டு இருக்கும் உடலில் மூளை,இருதயம், ஈரல், மற்றும் கருப்பை ஒன்று மட்டும் இருப்பது இதை உணர்த்தும்.
இருதயமானது ஒரு தசையும் நாணும் இனைந்த ஒரு உறுப்பு, அதில் நான்கு அறைகள், இரத்த ஓட்டம் அந்த நான்கு அறை (chambers) வழியாகவும்
கேள்வி:வணக்கம். என் பெயர் .gm எனக்கு 78 வயதாகிறது.பேஸ் மேக்கர் வைத்துள்ளேன். பேஸ் மேக்கர் வைத்து 11 மாதம் ஆகிறது. இத்தனை நாள் தலைச் சுற்றல் இல்லை.இப்பொழுது குனிந்தாலோ நிமிர்ந்தாலோ தலை சுற்றுகிறது. இதனால்தான் ஏற்படுகிறதா? நான் ஒரு நாளைக்கு 2 முறை 2 மாடி ஏறி இறங்கலாமா? தயவு செய்து பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்பது நாம் முன்பே அறிந்த உண்மை. மேலும் இருதயமானது ஒரு தசையும் நாணும் இணைந்த ஒரு உறுப்பு, அதில் நான்கு அறைகள், ரத்த ஓட்டம் அந்த நாலு அறை (chambers) வழியாகவும் செல்லுவதை ஒரு வழிப்படுத்துவதற்கு என்று சாதனங்கள், வால்வ், (valves) உண்டு. இரண்டு ஏட்ரியம்(atrium) மற்றும் இரண்டு வென்ட்ரிகிள் (ventricle) என்ற அறைகள்

Oct 10, 2012

இந்தோனேசியாவின் தீவுகள்.


Picture

                                 
இந்தோனேசியாவின் தீவுகள் போர்ணியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இதன் நிர்வாகப் பகுதி, இந்தோனேசியா, மலேசியா, மாற்றும் புரூணை ஆகியவற்றிற்குப் பிரிக்கப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய தீவாக இது அறியப்படுகிறது. இந்தோனேசியாவில் இத்தீவு கலிமந்தான் என்றழைக்கப்படுகிறது. கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்ணியோ என்பது சாபா மற்றும் சரவாக் மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன. போர்ணியோ தீவு வடக்கேயும் வடமேற்கேயும் தென் சீனக் கடல், வடகிழக்கே சுளு கடல், கிழக்கே செலெபெஸ் கடல், மற்றும் மக்கசார் நீரிணை, தெற்கே

இந்தியத் தீவுகள்.

Picture


                                  இந்தியத் தீவுகள்
                                  அந்தமான் தீவுகள்என்பது வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளின் ஒரு பகுதியாகும். போர் பிளேர் நகரமே இதன் நிர்வாக மையம் ஆகும். அந்தமான் தீவுகள் அனைத்தும் அந்தமான் மாவட்டம் என்ற நிர்வாக அமைப்பின் கீழ் வருகின்றன். மற்றொரு மாவட்டமான நிகொபார் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு உருவானது. அந்தமானின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 314, 084 ஆகும்.
இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 576 தீவுகள் உள்ளன. அவற்றில் இருபத்து ஆறு தீவுகளில் குடியேற்றங்கள் உள்ளன. இவை ஊக்ளி ஆற்றில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இத்தீவுத் தொடரின்

ஆஸ்திரேலியத் தீவுகள்.

Picture


                          ஆஸ்திரேலியத் தீவுகள் நோர்ஃபோக் தீவு (Norfolk Island, என்பது பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இத்தீவும் இதனருகே அமைந்துள்ள வேறு இரு தீவுகளும் இணைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் வெளிப் பிரதேசமாக ஆஸ்திரேலியாவினால் நிர்வகிக்கப்படுகிறது. இத்தீவில் வளரும் ஊசியிலை மரம் நாட்டின் சின்னமாக அதன் கொடியில் வரையப்பட்டுள்ளது. இம்மரம் ஆஸ்திரேலியாவில் பிரபலமானதாகும். நோர்போக் தீவு தெற்கு பசிபிக் கடலில் ஆஸ்திரேலியப் பெருநிலப் பரப்பின் கிழக்கே அமைந்துள்ளது. வூ இதன் பரப்பளவு 34.6 கிமீ² (13.3 மைல்²), 32 கிமீ நீள கரையோரப் பிரதேசத்தைக்

இலங்கையின் தீவுகள்.


Picture


                இலங்கையின் தீவுகள் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகள் சப்த தீவுகள் எனப்படும். அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:
1. லைடன் தீவு (வேலணைத்தீவு)
2. புங்குடுதீவு
3. நயினாதீவு
4. காரைநகர்
5. நெடுந்தீவு
6. அனலைதீவு
7. எழுவைதீவு
 8. (மண்டைதீவு)
இவற்றுள் லைடன் தீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன. ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு. சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும், ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:
பெயர்                                    ஆங்கிலத்தில்               ஒல்லாந்தர் பெயர்        கந்தபுராண பெயர்
வேலணைத்தீவு                Velanaitivu                             Leiden (லைடன்)             சூசை
புங்குடுதீவு                             Punkudutivu                         Middleburgh                        கிரவுஞ்சம்
நயினாதீவு                             Nainativu                                Harlem                                   சம்பு
காரைநகர்                               Karaitivu                                 Amsterdam                          சாகம்
நெடுந்தீவு                               Neduntheevu                        Delft (டெல்ப்ற்)                 புட்கரம்
அனலைதீவு                          Analaitivu                              Rotterdam                            கோமேதகம்
எழுவைதீவு                           Eluvaitivu                               Ilha Deserta                         இலவு

                                       தீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை, ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடப் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது. மேலும் ஊர்காவல்துறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும், தீவு மக்களின் உணவு, மொழி போன்ற சில அம்சங்கள் கேரள மக்களுடன் ஒப்பிடத்தக்கவை. போர்த்துகேயர் (1505 - 1658), ஒல்லாந்தர் (1656 - 1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ குருமார்கள் வந்து போதித்து பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக "குடிமைகள்" என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர், வயல்களிலிலும், மேற் சாதி வீடுகளிலும் கூலி வேலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். மேலும், சம ஆசனம், சம போசனம் மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர, மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே வாழ்ந்தனர். தற்போது, இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம், பின்னர் ஏற்பட்ட புலப் பெயர்வு காரணமாக மிகவும் வலுவற்று இருக்கின்றது. யாழ் சமூகத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலின்றி தீவுகளில் கல்வி வசதி குறைவு, அதன் காரணமாக பலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இக் கூற்றை கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை என்ற நூல் பின்வருமாறு விபரிக்கின்றது: "வியாபாரத்தை பொறுத்தமட்டில், (இத்தகைய) கல்வி வசதிகள் பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் கடைகள் நிறுவினர். இன்றும் இந்நிலைமை ஓரளவு தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். காரைநகர், புங்குடு தீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக விளங்கினார்". இலங்கையின் வட மாகாணத்துக்கு உள்ளேயும் கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில் விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே. "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதற்க்கமைய ஈழப் போர் காலத்தில் தீவுப் பகுதி மக்கள் பெரும்பாலனவர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள்.
                                        ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த வியாபார வெளி தொடர்புகள் இப் புலம் பெயர்வை உந்துவித்திருக்கலாம். பொரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி வாழுகின்றார்கள். விவசாயம், மீன்பிடி, வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படை. நில வளம், நீர் வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல், தோட்ட செய்கை, மற்றும் வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இத் தீவுகளின் புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. தீவக மக்கள் கொழும்பு, தென் இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாபார தொடர்புகளை பேணியும், வியாபர தாபனங்களை உருவாக்கியும் பொருள் ஈட்டுவதில் ஈடுபட்டு வந்தனர், வருகின்றனர். இங்கும், யாழிலும் உற்பத்தியாகும் பல பொருட்களை இவ் வியாபரிகளே பல பிரதேசங்களிலும் சந்தைப்படுத்துகின்றார்கள். தீவக பொருளாதார கட்டமைப்பை யாழ்ப்பாண அரச உத்தியோக, உயர் கல்வி, தொழில் ரீதியிலான பொருளாதார கட்டமைப்போடு ஒப்பிட்டு வேறுபாடு சுட்டலாம். தீவுகள் அரசியல் முக்கியத்துவம் அற்ற பிரதேசங்களாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளன. எனவேதான், இந்திய அமைதிகாக்கும் படை தீவுகளை ஆக்கிரமிக்கவில்லை. மேலும், இலங்கை அரசு தீவுப்பகுதிகளை ஆக்கிரமித்த பொழுது ஈழப் போராளிகள் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க முயலவில்லை. எனினும், நயினா தீவில் உள்ள விகாரை மற்றும் இராணுவ முகாம், ஊர்காவல்துறையில் உள்ள துறைமுகம் என்பன கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. இத் தீவுகளில் இருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ, அல்லது அத்தீவுகளில் உள்ள கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்கள் அமைத்து அத் தீவுகளில் சமூக சேவை செய்யது வருகின்றார்கள். ஆபத்து உதவிகள், வைத்திய உதவிகள், பாடசாலைகள் மீள் கட்டமைப்பு, சனசமூக நிலையங்கள் பராமரிப்பு, தொழில் வள உதவிகள் (படகுகள், மீன் வலைகள், இழுவை இயந்திரங்கள், விதைகள், விவசாய நுட்பங்கள், மர வேலை கருவிகள்), பொருள் சந்தைப்படுத்தல் ஏற்றுமதி உதவிகள், போக்குவரத்து மேம்படுத்தல், மின்சத்தி வழங்குதல், கணணி கல்வி ஊக்குவிப்பு, தொலை தொடர்பு மேம்படுத்தல், குழந்தைகள்-முதியோர்-நோய்வாய்பட்டோர் பராமரிப்பு, கோயில்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள் பராமரிப்பு மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர். இவ் அமைப்புகள் தொடர்பு தகவல்கள் வியாபார/விளம்பர கைநூல்களில் இருக்கின்றன.
அவற்றின் விபரம் பின்வருமாறு: லைடன் தீவு (வேலணைத்தீவு)
கரம்பொன் மக்கள் ஒன்றியம் - www.karampon.com
காவலூர் - கனடா மக்கள் ஒன்றியம்
நாரந்தனை மக்கள் ஒன்றியம் - கனடா
சுருவில் மக்கள் ஒன்றியம்
புளியங்கூடல் மக்கள் ஒன்றியம்
சரவணையூர் மக்கள் ஒன்றியம்
வேலணை மக்கள் ஒன்றியம் - www.velanai.com
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (பிரித்தானியா) www.pungudutivu.org
சர்வதேச நெடுந்தீவு ஒருங்கிணைப்பு மையம் www.neduntheevu.com
நயினாதீவு கனடிய அபிவிருத்தி சங்கம்
அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா - Analaitivu
கனடா காரை கலாச்சார மன்றம் - www.karainagar.com
இத் தீவுகளில் இருந்து யாழ் குடா நாடு நோக்கியோ, வெளி நாடுகள் நோக்கியோ மக்கள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றார்கள். பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களே இத் தீவுகளில் இன்னும் தங்கி உள்ளார்கள் என்றும் கூறலாம். எனினும், புலம் பெயர்ந்தவர்களிடம் ஊர் பற்றிய அக்கறை உள்ளது. அவர்களுடைய உதவியுடன் இத் தீவுகள் பொருளாதார அபிவிருத்தி அடையலாம். மேலும், அவர்களுக்கு இத்தீவுகள் உல்லாச அல்லது சுற்றுலா இடங்களாகவும் பரிமானிக்கலாம்.
                                        லைடன் தீவு (Layden island) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் பெரிய தீவு ஆகும். வேலணைத்தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுவதுண்டு. கி.பி. 1658 முதல் கி.பி. 1796 வரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டியிருந்த தீவுகள் ஏழுக்கும் ஒல்லாந்து (Holland) நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்களை இட்டார்கள். இவற்றில் தெற்கு ஒல்லாந்தில் உள்ள லெய்டன் (Leiden) (யாழ்ப்பாணத்தில் இப்பெயரை லைடன் என்றே உச்சரிப்பது வழக்கம்) நகரத்தின் பெயர் இத் தீவுக்கு வழங்கப்பட்டது. இங்கு பத்து கிராமங்கள் உண்டு, அவை பின்வருமாறு:
1. சுருவில்
2. நாரந்தனை
3. கரம்பொன்
4. ஊர்காவற்றுறை (காவலூர்)
5. பரித்தியடைப்பு
6. புளியங்கூடல்

7. சரவணை
8. வேலணை

9. அல்லைப்பிட்டி
10. மண்கும்பான்
இவற்றுள் ஊர்காவற்றுறை (காவலூர்) பிரித்தானியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் வடக்கு இலங்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த துறை முகங்களில் ஒன்றாகும்.
லைடன் தீவின் கிராமங்களைப் பற்றியொரு பாடல் தொகுதி
ஊர்காவர்றுறை, கரம்பன், சுருவில்
உற்றநற் புளியங்குடல் நாரந்தனை
பேர்மிகு சரவணை, வேலனை மண்கும்பான்
பெருமை சொல் மண்டைத்தாவல் லைப் பிட்டி
சேர்ந்தே லைடன் தீவெனும் நிலமாம் (கவிஞர் சக்தி அ. பால. ஐயா)
வேலணைத்தீவின் நேர் வடக்கே அமைந்துள்ளது காரைநகர் என்று பொதுவாக அழைக்கப்படும் காரைதீவு. தென் மேற்குத் திசையில் புங்குடுதீவும், தென் கிழக்குத் திசையில் மண்டைதீவும் அமைந்துள்ளன. மண்டைதீவு யாழ்ப்பாண நகரத்துக்கும் வேலணைத்தீவுக்கும் இடையில் உள்ளது. வேலணைத்தீவு பண்ணை கடல் வழிச் சாலையினால், மண்டைதீவுக்கு ஊடாக யாழ்ப்பாண நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு, காரைதீவு என்பவற்றை இத் தீவுடன் இணைக்கும் கடல் வழிச் சாலைகளும் உண்டு.
அல்லைப்பிட்டி (Allaipiddy) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.ஊர்காவற்துறை என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தீவுகளுள் ஒன்றான, லைடன் தீவு எனவும் அழைக்கப்படுகின்ற, லைடன் தீவில் உள்ள ஒரு ஊராகும். இங்கே ஒரு சிறிய துறைமுகமும் உண்டு. யாழ்ப்பாண அரசுக் காலத்திலும், போத்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலும், இத் துறைமுகம் நாட்டின் வடபகுதியிலிருந்த முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இத்துறைமுகத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன. புனித பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இத்துறைமுகத்துக்கு 16ம் நூற்றாண்டில் வந்திறங்கி கத்தோலிக்க மதப் பரப்பலில் ஈடுபட்டார்.
கரம்பொன் (Karampon) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
சரவணை (Saravanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்க்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
சுருவில் (Suruvil) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது கடல்வளமும், நல் மண்வளமும் கொண்டது. இக்கிராமமானது தமிழீழம் யாழ்ப்பாணத்திற்கு மூவைந்து கிலோமீற்றர் தொலைவிலே உள்ளது. இங்கு ஏறக்குறைய 2500 - 3000 குடிமக்கள் உள்ளனர். வளைந்த கிராமம் என்ற படியால் சுரி + வில் = சுருவில் என வந்தது என்பர். " முன்னொரு காலத்தில் பல செல்வந்த வியாபாரிகளின் தாயகமாக செழிப்புற்று இருந்தமையினால், "குட்டி அமெரிக்கா" என்ற குறிப்பெயரும் கொண்டிருந்தது. சுருவில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலப்பகுதியில் மிகப் பிரபல்லியமானதொன்றாக விளங்கியது. சுருவில் பதியின் அருகாமையில் கடற்கரைப் பிரதேசம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் அயற் தீவுகளான் புங்குடுதீவு, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு, காரைதீவு, மண்டைதீவு போன்ற இடங்களுக்கு முற்காலத்தில் இலகுவாகப் போக்குவரத்துச் செய்வதற்கு இப்பகுதியில் அமைந்துள்ள கப்பல் துறைமுகமே பெரிதும் உதவியாக இருந்தது. சுருவில் கடல்வளம் நிறைந்ததொன்றாக விளங்கியமையால் கடற்கரைப் பிரதேசத்தை அண்டி நூற்றுக்கதிகமான மீனவர்கள் வசிக்கின்றார்கள். அவர்களில் பலர் கப்பல் ஓட்டிகள். இவர்கள் இந்தியா, மாலைதீவு போன்ற இடங்களில் இருந்து உணவு இறக்குமதியிலும், மக்கள் போக்குவரத்துக்கு உதவியாகவும் முற் காலங்களில் செயற்பட்டார்கள். தற்போதைய நிலவரம் தெரியவில்லை. சுருவில் மண்வளம் கமச்செய்கைக்கு (Paddy cultivation) மிகவும் உகந்தது. நெல் பரவலாகப் பயிரிடப்படுகின்றது. கிராமத்தை சுற்றிக் கற்பகதருச் (பனைமரச்) சோலைகளும், தென்னஞ்சோலைகளும், மாஞ்சோலைகளும் நிறைந்திருக்கின்றன. தோட்டங்களில் புகையிலை, வெங்காயம், மிளகாய், மரக்கறிகள் பயிரப்படுகின்றன. கற்பகத்தருவின் மூலப்பொருட்களான ஓலை, மட்டை, நார், பனம்பழம், பனாட்டு, புழுக்கொடியல், ஒடியல் போன்றவற்றைகொண்டு சிறு கைத்தொழில்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கிருந்த மக்களின் மற்றுமொரு முக்கிய பொருளாதார மார்க்கம் வியாபாரம் ஆகும். கொழும்பிலும் பிற இடங்களிலும் கடைகள், உற்பத்தி தாபனங்கள் வைத்து பொருள் ஈட்டினர். எனினும், போர் சூழலுக்கு பின்னர் பல வர்த்தகர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர். யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலமை அடுக்கமைவின் கூறுகள் இங்கு உண்டு. குறிப்பாக மீனவ, விவசாய-வியாபார சமூகங்களுக்கிடையே ஒரு இடைவெளி இருக்கின்றது. இருவரும் ஒருவரை ஒருவர் தங்கி வாழ்ந்தாலும், ஒரு இடைவெளி இருக்கின்றது. எனினும், ஒரு அடித்தளமான சமத்துவ அல்லது சமநிலை உணர்வு இங்கு மேலோங்கி இருக்கின்றது எனலாம். இங்குள்ள பெரும்பான்மை மக்கள் ஐயனார், அம்மன் ஆகிய குல தெய்வங்களை வழிபடும் இந்துக்கள். இங்கிருக்கும் ஐயப்பன் கோயில், நாக பூசணி அம்மன் கோயில், வைரவ கோயில் ஆகியவை இம் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றுள், ஐயனார் கோயில் 250 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட, விசாலமான கோயிலாகும். யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போர்த்துகேயர் காலனித்துவ ஆட்சியின்]] கீழ் கணிசமான மக்கள் கத்தோலிக்க கிறீஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டனர். இங்குள்ள அன்னை மேரி ஆலயம் கத்தோலிக்கரும், இந்துக்களும் வழிபடும் ஒரு தலம் ஆகும். இங்கு வாழும் மக்கள் அனேகர் பரம்பரை உறவினர், சினேகர். ஆகையால், இந்து கிறீஸ்தவ வேற்றுமை அல்லது பிரிவினை இல்லை. அதாவது, மதம் காரணமாக பிரச்சினையோ, அல்லது குமுகாய உணர்வில் பாதிப்போ இல்லை. சுருவிலில் ஒரு ஆரம்ப பாடசாலை, 5 ம் வகுப்புவரை கொண்ட அன்னைமேரி பாடசாலை ஆகியவை கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. மேற்கல்விக்கு எல்லை கிராமங்களுக்கோ அல்லது வெளி கிராமங்களுக்கோ செல்ல வேண்டும். கிராம அபிவிருத்தி சபை, தையல் நிலையம், பப்பட தொழிற்சாலை ஆகியவை முன்னர் இயங்கி வந்தன. ஈழப் போரின் காரணமாக அவற்றின் தற்போதைய நிலை பற்றி தெளிவான விபரங்கள் இல்லை. மேலும், மக்கள் வசதிக்காக கூட்டுறவுக்கடையும், உபதபாற்கந்தோரும் உண்டு.
நாரந்தனை (Naranthanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்க்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.பரித்தியடைப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
புளியங்கூடல் (Puliyankodal) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்க்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
                            வேலணை(Velanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். வேல் + அணை = வேலணை; "வேல் அணைந்த இடம்". முருக வழிபாடு முதன்மை பெற்றிருந்ததனால் இப்பெயர் வந்திருக்கலாம் என்றும், "பண்டை நாளில் வேலன் என்ற தலைவனின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தமையினால் வேலணை எனப் பெயர் பெற்றதன்ப" என்றும் இரு பெயர் தோற்ற காரணங்களை சுட்டுகின்றது "இடப்பெயர் ஆய்வு" என்னும் நூல்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...