
சஞ்சீவி மூலிகையின் தேடுதலின்
போது அதன் இன்னொரு பரிணாமத்தை எனக்கு ஒரு மகான் உபதேசித்தார். நமது புராண காவியங்களில்
ஒன்றான ராமாயணத்தில் ஸ்ரீராம பிரான் சீதா தேவியை ராவணனிடமிருந்து மீட்கும் போது நடந்த
போரில் ராவணனின் மகன் இந்திரஜித் நாகாஸ்திரம் ஏவியதில் ஸ்ரீராமர், லட்சுமணன் ஆகியோர்
மூர்ச்சையாகி விட இதனால் மனம் கலங்கிய ஹனுமனிடம், ஜாம்பவான் சஞ்சீவி மலையினை பெயர்த்து
வரச் செய்து இம் மூலிகையினைக் கொண்டு இருவரையும் உயிர் பெறச் செய்தார் என்று ராமாயணம்
சஞ்சீவி மூலிகையின் மகிமையை பறை சாற்றுகிறது.
மேற்கண்ட ‘நாகாஸ்திரம்’ என்பது நாகப் பாம்பின் விஷத்தினால் தயார் செய்யப்பட்ட
ஒரு ஆயுதம். இதன் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகையே ‘சஞ்சீவி’ என்பதாகும். இறைவனின் படைப்பில் எங்கெல்லாம் நஞ்சு உள்ளதோ, அதன்
அருகிலேயே அமிர்தமும் படைக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயமான உண்மை. தேவர்கள் சாகாவரம்
தரும் அமிர்தம் பெற திருப்பாற்கடலை கடைந்த போது முதலில் விஷம் தான் வெளி


















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா