வெப்பம் அதிகமாகி விட்டால் இவை மண் மேட்டில் காற்றுத் துளைகளைப் போடும். இன்னும் வெப்பம் அதிகரித்தால் முட்டையை குளிர்ந்த மணலால் மூடிப் பாதுகாக்கும். மரங்களிலிருந்து விழும் இலை, பழம் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் இந்த தெர்மாமீட்டர் பறவை, தன் தலை, பாதங்கள் அல்லது அலகினால் தட்பவெப்பநிலை மாற்றத்தை உணருவதாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் இதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் உறுதி செய்யப் படவில்லை.
அன்று தொடக்கம் இன்று வரை கணணி சேமிப்பகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (விளக்கப்படம் மூலம்.)
கணனியின் வருகையின் பின் தகவல் தொழில்நுட்பத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டது. ஒரு காலத்தில் பேனையும் கையும் என்றிருந்த நிலைமை மாறி இன்று அணைத்து துறைகளும் கணணிமயப்படுத்தப்பட்டுள்ளது. கணனியின் பிரதான வன்பொருளான வன்தட்டிலே அணைத்து தரவுகளும் சேமிக்கப்படுகின்றது. இந்த வன்தட்டின் கொள்ளளவு MB, GB என்பதனை தாண்டி TB (1000GB) வரை வளர்ந்திருப்பதுடன் இணைய சேமிப்பகம் என்ற முறையும் வந்துள்ளது. தகவல் தொழில் நுட்ப யுகத்தில் ஏற்பட்ட வேகமான மாற்றத்தால் இந்த வன்தட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டது. இதனை பின்வரும் விளக்கப்படம் மூலம் நன்கு விளங்கிக்கொள்ளலாம்.






















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா