Apr 4, 2014

சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள்


siruசிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டால் அது கடுமையான அவதியைக் கொடுத்துவிடும் என்பது, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் சில சித்தவைத்திய முறைகள்…
வாழைத்தண்டு சாறு:
வாழைத் தண்டு சிறுநீரகக்கல் வராமல் தடுக்கவும், வந்தால் அது கரைந்து விடவும் கூடியது. எனவே வாழைத்தண்டுச் சாறு எடுத்து, தினமும 3 வேளைகளில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல் கரைந்துவிடும். வாழைத்தண்டு மட்டுமல்லாது வாழைப்பூவும் சிறுநீரகத்துக்கு நல்லது.
பிரஞ்சு பீன்ஸ்:
இதை விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்துவிட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்த வேண்டும். இதனால் நாளடைவில் சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும். அது வெளி வரும் நேரம் நல்ல வலி இருக்க வாய்ப்புள்ளது.

கறிவேப்பிலை சாப்பிடுவதால்–மருத்துவ குணங்கள்



கறிவேப்பிலை சாப்பிடுவதால்
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.
வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இப்கபடியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.
இளம் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் என்்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம். ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒன்ரறு உள் ளது. அதாவது, நரை முடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அதிதகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரை முடி போயே போ‌ச்சு.இது அனுபவ ‌ரீ‌தியாக‌க் க‌ண்ட உண்டமை.

பரங்கிக்காய் (மஞ்சள் பூசணி வெண் பூசணி)

பரங்கிக்காய் (மஞ்சள் பூசணி வெண் பூசணி)

பரங்கிக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறாம்.

பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போக்கும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும்.

ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.

இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம். வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.

வெந்தயத்தை காயவைத்து பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.

இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும். வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.

சர்க்கரை நோய் குறைய:


 



தேவயான பொருட்கள்:
சிறியா நங்கை இலை பொடி
நெல்லி முள்ளி பொடி.
நாவல் கொட்டை பொடி.
வெந்தயப் பொடி.
சிறு குறிஞ்சான் இலை பொடி

செய்முறை: சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

தினமும் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் எந்த நோய்களும் வராது.



*தினமும் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் எந்த நோய்களும் வராது.கீரை மிக குறைவான விலைகளிலே கிடைகிறது.கீரைகளை தவிர்த்து மேற்கத்திய உணவுகளை தேடி அலைந்த பலர் இன்று ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் என்று அவதி படுகின்றனர்.

*கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர். உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் கீழ் மேனியைப் பொன்னாக்கும் சிவப்புப் பொன்னாங்கண்ணி பற்றி தெரிந்துகொள்வோம்.

*இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.சீமை பொன்னாங்கண்ணிதான் சிவப்பு பொன்னாங் கண்ணி என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் தோட்டத்தில் இதை

Apr 3, 2014

நோயற்ற வாழ்வே குறையற்ற வாழ்வு : இமயம் நிஜமாகவே சரியும் வறட்சியால் உலகம் அழியும்- ஐ...

நோயற்ற வாழ்வே குறையற்ற வாழ்வு : இமயம் நிஜமாகவே சரியும் வறட்சியால் உலகம் அழியும்- ஐ...: டெல்லி: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை உலக நாடுகள் சந்திக்க தயாராக வேண்டும். ...

வறட்சியடைந்த கண்களை கையாளுவதற்கான


 கண்களில் அடிக்கடி கண் எரிச்சல்கள் ஏற்படுகிறதா? அப்படியானால் அதனை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கண் இமைகளுக்கு அடியில் இருக்கும் குழல்களின் வழியாகத் தான் கண்ணீர் சுரக்கும். இந்த குழாய் வறண்டு போவதையே உலர்ந்த கண்கள் என்று கூறுகின்றனர். குளிர் மற்றும் கோடைக்காலத்தின் போது இந்த பிரச்சனை இன்னமும் தீவிரமாக இருக்கும். அதற்கு காரணம், இக்காலத்தில் நிலவும் வறண்ட காற்றும், வறண்ட வெப்பமும் தான். கண்களின் சரியான செயல்பாட்டிற்கு கண்ணீர் அவசியமானதாக உள்ளது. அதற்கு காரணம், கண் இமைகள் கண்மணிகளோடு ஒன்றிட கண்ணீர் ஒரு மசகிடுதலாக செயல்படுகிறது. இதனால் கண்மணிகள் ஈரப்பதத்துடன் இருக்க கண்ணீர் உதவுகிறது. உலர்ந்த கண்கள் உங்கள் பார்வை திறனை குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. சில நேரம் கண்மணிகளுக்கு தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும். இப்படி குறையுள்ள பார்வை திறனுடன் தினமும் செய்யும் வேலைகளை ஒழுங்காக செய்ய முடியாது தானே. சமீபத்திய செய்தி

இமயம் நிஜமாகவே சரியும் வறட்சியால் உலகம் அழியும்- ஐ.நா எச்சரிக்கைl

டெல்லி: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை உலக நாடுகள் சந்திக்க தயாராக வேண்டும். ஆசியா கண்டத்தை பொறுத்தவரை இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கடும் வெயில் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய அபாயகரமான நிலைமை ஏற்படலாம் என ஐ.நா வின் புவியியல் சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. புவி வெப்பமடைதல், பாறைகள் நகர்வு உள்ளிட்ட பருவநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக அமைக்கப்பட்ட ஐ.நா. சபையின் கமிட்டி இது பற்றிய தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொடுமையான வெயில்: இதன்படி, இந்த நூற்றாண்டின் மத்தியில் ஆசியா கண்டத்தை பொறுத்த வரையில் இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் மிகக்கடுமையான வெயிலை மட்டுமல்லாது குடிநீர் தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அத்துடன் உணவு

Apr 2, 2014

ஸ்மார்ட் போன் அனைத்திலும் இலவச இணைய வசதி

ஸ்மார்ட் போன் அனைத்திலும் இலவச இணைய வசதி


உலக அளவில், ஏறத்தாழ 700 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள், இந்த போன்களின் வழியே இணைய வசதிகளைப் பெறுவதில்லை. 

சிலர் இவற்றின் வழியே இணைய இணைப்பு பெறலாம் என்ற நிலையில் அது குறித்து யோசிப்பதே இல்லை. 

சிலர், இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதனையே அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

உலகில் உள்ள மக்கள் அனைவரையும் நட்பு பாலத்தில் இணைப்பதற்குத் தன் நிறுவனம் உதவியாக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தினைக் கொண்டு இயங்கும் பேஸ்புக் நிறுவனம், ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும், இணைய இணைப்பினை 

இலவசமாகத் தருவது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறது. 

பல கோடி மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களை இணையத்திற்கென பயன்படுத்தாத நிலையிலேயே, பன்னாட்டளவில், இணையம் வழியேகோடிக்கணக்கான பண மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அனைத்து மக்களும் பயன்படுத்தும் காலம் வருகையில், நிச்சயம் இது பல மடங்காகப் பெருகும் வாய்ப்புள்ளது. சமுதாய நிலையிலும் மக்களிடையே மாற்றங்கள் பல ஏற்படும். 

எனவே தான், பேஸ்புக் எப்படியாவது, ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் இணைய இணைப்பினை இலவசமாக வழங்க முயற்சி எடுக்கிறது. இது குறித்து, ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுடன், பேஸ்புக் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

கணணி செய்தி தெரிந்து கொள்வோம்: Pendrive யை RAM ஆக பயன்படுத்தும் வழிமுறைகள்





கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கணனியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...