சனிக்கிரகத்தின் வளையங்கள்
சனிக்கிரகத்தைச்
சுற்றி அழகான மூன்று வளையங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. அவற்றில்
வெளிப்புறம் காணப்படும் இரண்டு வளையங்களும் மிகப் பிரகாசத்துடன்
திகழ்கின்றன. இவற்றைத் தாண்டி சனியின் மிக அருகாமையில் காணப்படும் உள்
வளையம், அவ்வளவு ஒளியுடையது அல்ல. பிரகாசமான இரண்டு வளையங்களையும் 1610-ம்
ஆண்டு கலிலியோ என்ற வானவியல் அறிஞர் தான் கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு
அதைப்பற்றித் தெரியவில்லை. 1850-ம் ஆண்டு தான் மூன்றாவது வளையம்
கண்டுபிடிக்கப்பட்டது.
வளையங்களாகத்
தெரிபவை, உண்மையில் வளையங்கள் கிடையாது. முன்பு எப்போதோ சனியைச் சுற்றி
வந்த உபகிரகம் ஒன்று, சனியை நெருங்கி வரும்போது உடைந்து துகள்களாகி சனியைச்
சுற்றி வருகிறது என்கிறார்கள், விஞ்ஞானிகள். இந்த வளையங்கள்
பல்லாயிரக்கணக்கான சிறிய துகள்களால் ஆனவை என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் துகள்கள் எங்கிருந்து வந்தன என்பது
மட்டும் மர்மமாகவே உள்ளது.
செயற்கைக்கோளை சனிக்கிரகத்துக்கு ஆராய்ச்சி செய்ய அனுப்பும்போது, செயற்கைக் கோள் அந்த வளையங்களை உடைத்து விடாதா? என்று பலருக்கும் சந்தேகம் தோன்றலாம்.
செயற்கைக்கோளை சனிக்கிரகத்துக்கு ஆராய்ச்சி செய்ய அனுப்பும்போது, செயற்கைக் கோள் அந்த வளையங்களை உடைத்து விடாதா? என்று பலருக்கும் சந்தேகம் தோன்றலாம்.
தற்போதைய
ஆய்வுகளின்படி சனியைச் சுற்றி 11 வளையங்கள் இருப்பதாகத் தெரிவிக்
கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். இன்னும் கூட சில வளையங்கள் இருக்கலாம்
என்றும் அவர்கள் நம்புகின்றனர். சில வருடங்களுக்கு முன்புகூட புதிதாக
இரண்டு வளையங் கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வளையங்கள், பெரும்பாலும்
தூசியும், பனித்துகள் களும் நிறைந்தவை.
பயனியர்
2 (1979), வாயேஜர் 1 (1980), வாயேஜர் 2 (1981) ஆகிய விண்கலங்கள் இதுவரை
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா