Apr 30, 2012

சூப்பர் மார்க்கெட் மனோதத்துவ தந்திரங்கள் – 1


இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.

20 வருடங்களுக்குமுன் மேலை நாடுகளில் மாத்திரமே பிரபலமாக இருந்த சூப்பர் மார்க்கட்கள் இப்போது ஆசிய நாடுகளிலும் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் வந்துவிட்டன. ஒருகாலத்தில் இந்தியப் பாவனையாளர்களின் தேவைகளை முழுமையாக கவர் செய்தவை சிறிய மளிகைக் கடைகள்தான். இப்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன சூப்பர் மார்க்கெட்கள். சிறிய நகரங்களில்கூட வந்துவிட்டன.


உலகின் பிரபல சூப்பர் மார்க்கெட் செயின்கள் இந்தியாவில் கடைவிரிக்கத் தொடங்குகின்றன. அல்லது, ஒரு இந்தியப் பார்ட்னருடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்
செயின்களை அமைத்திருக்கின்றன. இதைத்தவிர இந்திய வர்த்தகர்களும் அச்சு அசலாக மேலைநாட்டுப் பாணியில் சூப்பர் மார்க்கெட்களைத் திறந்திருக்கிறார்கள்.


அட்லான்டாவிலுள்ள (அமெரிக்கா) ஒரு சூப்பர் மார்க்கெட்
மொத்தத்தில் நீங்கள் வசிப்பது ஐரோப்பாவோ, வட அமெரிக்காவோ, அவுஸ்திரேலியாவோ அல்லது ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றோ, சூப்பர் மார்க்கெட்கள் உங்கள் வாழ்க்கையில் அவசியமான ஒன்றாகி விட்டது.

வட அமெரிக்காவில் வசிப்பவராக நீங்கள் இருந்தால் உங்கள் குடும்ப வருமானத்தில் சுமார் 25 சதவீதம் வரை நீங்கள் செலவு செய்வது சூப்பர் மார்க்கெட்களில் என்கிறது கனேடிய பாவனையாளர் அமைச்சினால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரம். இது ஒரு ஆவரேஜ் சதவீதம். ஐரோப்பாவிலும் மற்றய மேலை நாடுகளிலும் இருப்பதும் கிட்டத்தட்ட இதே ஆவரேஜ்தான். ஆசியாவில் வசித்தால் நீங்கள் செலவு செய்வது இதைவிடச் சற்று அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.

இந்தக் கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவராக நீங்கள் இருந்தால், ஒரு காரியம் செய்யுங்கள். – அடுத்துவரும் 1 மாத காலத்திற்கு ஒவ்வொரு தடவையும் நீங்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குப் போய் ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போதும், ரசீதுகளை ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். 1 மாதம் முடிந்ததும் அவற்றிலுள்ள டாலர், யூரோ, அல்லது ரூபா பெறுமதியைக் கூட்டி வரும் தொகையை 12 ஆல் பெருக்குங்கள்.

வரும் விடை அல்லது நீங்கள் செலவு செய்யும் பணத்தின் தொகை ஆயிரக் கணக்கில் இருக்கும். உங்களுக்குத் தலைசுற்றும்.

இந்தத் தொகைதான் நீங்கள் வருடமொன்றுக்கு சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்களுக்கு செலவு செய்யப்போகும் ஆவரேஜ் தொகை.

நான் ஏற்கனவே கூறியதுபோல இந்தத் தொகை ஆளாளுக்கு அல்லது வேறு வேறு குடும்பங்களுக்கு வேறுபடும். சிலருக்கு வருட வருமானத்தில் 30 சதவீதமாக இருக்கலாம். வேறு சிலருக்கு வருட வருமானத்தில் 20 சதவீதமாக இருக்கலாம். புள்ளிவிபரப்படி கனேடிய ஆவரேஜ் 25 சதவீதம்.


பிரான்சிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வைன் பிரிவு
“சரி. இதற்கு என்ன செய்வது? வாழ்க்கைச் செலவு அப்படி” என்று வழமைபோல செலவு செய்துகொண்டு இருப்பதானால், நீங்கள் இதைப் படிக்க வேண்டியது அவசியமல்ல. அவசியம் எங்கே வருகிறது என்றால், கனேடியப் புள்ளிவிபரம் கொடுக்கும் மற்றொரு தரவில்!

அந்தத் தரவு என்ன? மொத்த வருமானத்தின் 25 சதவிகித தொகையை சூப்பர் மார்க்கெட்டில் செலவு செய்யும் ஒரு குடும்பத்தில் செலவு செய்யும் முழுத்தொகையின் 80 சதவீதம்தான் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது. மிகுதி வேஸ்ட் ஆகப் போய்விடுகிறது. அடடா!

அதாவது நீங்கள் 5000 டாலருக்கு ஷாப்பிங் செய்திருந்தால் 4000 டாலருக்கு வாங்கும் பொருட்களைத்தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். மிகுதி 1000 டாலர் பெறுமதியான பொருட்களை வீணடிக்கிறீர்கள் அல்லது உபயோகிக்காமல் எறிகிறீர்கள். இதில் பத்து நாட்களுக்குமேல் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு அழுகி எறியும் தக்காளி முதல், 2 வாரம் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்திருந்த பாதிப் பாக்கட் பால் எக்ஸ்பயரி தேதி முடிந்து எறிவது வரை அடங்கும்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில¢லை. கனேடியப் புள்ளிவிபரத்தில் மேலும் ஒரு தரவு இருக்கிறது. அதன்படி, நீங்கள் செலவு செய்யும் தொகையின் 10 சதவீதம், நீங்கள் தேவையில்லாமல் வாங்கும் பொருட்களில் செலவாகின்றது. அதாவது வருடத்திற்கு 5000 டாலர் செலவு செய்தால், சுமார் 500 டாலர் பெறுமதியான பொருட்களை நீங்கள் தேவையில்லாமல் அல்லது அவசியமில்லாமல் வாங்குகிறீர்கள்.


ஜப்பானிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் டிஸ்பிளே ஸ்டைல்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் இந்தக் கணிப்பு சரி என்பது புரியும்.

மலிவாகப் போட்டிருக்கிறார்கள், அல்லது இந்த வாரம் மாத்திரம் இந்தப் பொருள் தள்ளுபடி விலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வாங்கப்படும் பொருட்கள் இந்த வகை. அதே நேரத்தில், புதிதாக அறிமுகம் செய்கிறோம் என்று விளம்பரம் செய்யப்படும் பொருட்களின் விளம்பரத்தால் கவரப்பட்டு வாங்கப்படும் பொருட்களும் இந்த வகையில் வரும்.

இந்த 10 சதவீத பொருட்களின் தள்ளுபடி விலை விளம்பரங்கள் உங்கள் கண்ணில் தட்டுப்படாதிருந்திருந்தால், சூப்பர்மார்க்கெட்டில் இவை உங்களின் கைகளில் தட்டுப்பட்டிருக்காது. உங்கள் வீடுவரை வந்துமிருக்காது.

மேலேயுள்ள தரவுகள் இரண்டையும் கூட்டினால், சூப்பர் மார்க்கெட்களில் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் சுமார் 30 சதவீதத்தை வேஸ்ட் செய்கிறீர்கள். இது ஒருபுறம் இருக்க, மிகுதி 70 சதவீதம் செலவு செய்து நீங்கள் வாங்கிவரும் பொருட்களின் நிஜமான பெறுமதி அதுதானா? – அதை வேறுவிதமாகக் கேட்டால், நீங்கள் வாங்கிய பொருட்களை அதைவிட மலிவாக வாங்கியிருக்க முடியாதா?

நீங்கள் எந்தளவுக்கு ஷாப்பிங் புலி என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு சராசாரி வட அமொரிக்கப் பாவனையாளர் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் சாதாரணமாக வாங்கும் அதே பொருட்களை 15 சதவீதம் குறைவான விலையில் வாங்குவது சாத்தியம் என்கிறது அதே கனேடியப் புள்ளிவிபரம்.


கனடாவிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வெளிப்புறத் தோற்றம். இதைச் சொல்வது ஃபிளெக்ஸ் ப்ரைசிங் என்று. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால், சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் இங்கு சொல்லப் போகின்றோம்.

நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு கடைசியாக எப்போது போனீர்கள்? இன்று? நேற்று? கடந்த வாரம்? அது எப்போதாக இருந்தாலும், அந்த சூப்பர் மார்க்கெட்டின் உட்புறத்தை உங்கள் மனக்கண்ணில் கொண்டுவாருங்கள்.

வழமையாக சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும், அது எந்த நகரத்தில் இருந்தாலும், பொதுவான சில அம்சங்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? கவனித்திராவிட்டால் நாங்கள் இப்போது சொல்லப்போகும் சில அம்சங்கள் நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும் இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

1) சூப்பர் மார்க்கெட்களுக்கு செல்லும் ஆட்களில் அனேகமானவர்கள் வைத்திருக்கும் ஷாப்பிங் லிஸ்டில் இருக்கும் ஒரு அவசியப் பொருள் பால். இது நீங்கள் பயன்படுத்தும் பாலாகவோ, அல்லது குழந்தைகளுக்கான பாலாகவோ இருக்கலாம். சூப்பர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் தமது வருகையின் 70 சதவீதமான ட்ரிப்களில் பால் வாங்குகிறார்கள் என்கிறது புள்ளிவிபரம்.

அதை வேறுவிதமாகச் சொன்னால், நீங்கள் 10 தடவைகள் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் அதில் 7 தடவைகள் உங்களது ஷாப்பிங் லிஸ்ட்டில் பால் இருக்கிறது. சரி. கேள்வி என்னவென்றால், இப்படி அதிகமானவர்களால் வாங்கப்படும் பால், ஏன் சூப்பர் மார்க்கெட்டின் வாயிலருகேயோ காஷியருக்கு அருகேயோ வைக்கப்பட்டிருப்பதில்லை?

2) அநேக சூப்பர் மார்க்கெட்களின் உள்ளே வாத்திய இசை ஒலிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அப்படி ஒலிக்கும் இசை எந்த வகையான இசை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா. கவனித்திருந்தால் அதை இப்போது ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

3) நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட், சிப்ஸ், பாப்கார்ன் சூயிங்கம் போன்றவை உள்ளே ஒரு குறிப்பிட்ட ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். ஆனால் அதே பொருட்கள் நீங்கள் பணம் செலுத்தும் கேஷியருக்கு அருகிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்திருப்பீர்கள். ஒரே பொருட்கள் ஏன் இரண்டு வேறு வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?


பிரிட்டனிலுள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் செயின்.
மேலே குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் ஏதோ தற்செயலாக சூப்பர் மார்க்கெட்களில் அமைந்து விடுவதல்ல. இவை காரணமாக அமைக்கப்பட்டடிருப்பவை. காரணம் -சைக்காலஜி. மனோத்ததுவம். மனோதத்துவ ரீதியாக உங்களை மடக்குவதுதான் திட்டம்.

சூப்பர் மார்க்கெட் ஒன்றின் விற்பனையில் மிகப்பெரிய பங்கு வகிப்பது இந்த மனோத்துவ தந்திரங்கள். Consumer psychological Tricks.

முதலாவதாகக் கூறப்பட்ட பால் விவகாரத்தையே பாருங்கள். சூப்பர் மார்க்கெட்கள் பாவனையாளர்களின் வசதிக்கே முக்கியத்துவம் கொடுப்பதானால், கடைக்குள் நீங்கள் நுழைந்தவுடன் கையில் எடுக்கும் விதத்தில் அவை வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் சூப்பர் மார்க்கெட்டுக்கு நீங்கள் 10 தடவைகள் சென்றால், 7 தடவைகள் பால் வாங்கச் செல்கிறீர்கள்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...