கீழ்கண்ட மூலிகைகளை முறைப்படி சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
நிலவேம்பு
நிலவேம்பு
அதிமதுரம்
அதிமதுரம்
இந்துப்பு
இந்துப்பு
அறிகுறிகள்:
அதிக உடல் பருமன்.
தேவையான பொருள்கள்:
சுக்கு = 200 கிராம்
மிளகு = 25 கிராம்
திப்பிலி = 25 கிராம்
நிலவேம்பு = 25 கிராம்
அதிமதுரம் = 25 கிராம்
இந்துப்பு = 6 கிராம்
செய்முறை:
சுக்கை தோல் நீக்கி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 500 மி.லி இளநீர் விட்டு 12 மணி நேரம் ஊற வைத்து சுக்கை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும். மிளகை தூய நீரில் போட்டு கழுவி எடுத்து ஒரு மண் பாத்திரத்தில்
போட்டு 150 மி.லி பசும்பாலை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
திப்பிலியை தூய நீரில் கழுவி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி எடுத்து நன்றாக இடித்து சலித்து கொள்ளவும்.
அதிமதுரத்தை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி தூய நீர் விட்டு நீர் பாதியளவு சுண்டும் அளவுக்கு எரித்து அதிமதுரத்தை எடுத்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்து சலித்து கொள்ளவும்.
நிலவேம்பை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு புழுங்கலரிசி கழுநீரை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
இந்துப்பை இடித்து கொள்ளவும்.
இடித்து சலித்து வைத்த அனைத்தையும் ஒரு மண் பானையில் போட்டு நன்கு கலந்து மண் தட்டால் மூடி பானையை 6 மணி நேரம் கடும் வெயிலில் வைத்து எடுத்து மீண்டும் நன்றாக கலந்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
6 கிராம் அளவு மருந்தை 3 பங்காக பிரித்து காலை, பகல், இரவு என 3 வேளைகள் உணவுக்கு 1 மணி நேரம்முன்னதாக ஒவ்வொறு பங்கை சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வரவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
இந்த சூரணத்தை சாப்பிட போகும் ஒரு நாள் முன்னதாக சுகபேதி அருந்தவும். சுகபேதி அன்று மட்டும் பசும்பாலும், சோறும் அல்லது மோரும் சோறும் மட்டும் சாப்பிடவும். அடுத்த நாள் மருந்தை சாப்பிடவும்.
சாப்பிட கூடாதவை:
இந்த சூரணம், சாப்பிட்டு வரும் போது உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கடலை பருப்பு, மொச்சை, அகத்திக்கீரை, பூசணி, பரங்கிக்காய், பச்சரிசி, குளிர்ந்த பானங்கள், இறைச்சி வகைகள், பிஸ்கட் வகைகள், தயிர், இளநீர் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.
சாப்பிட கூடியவை:
மிளகு பொங்கல், துவரை,முளைக்கீரை, புளி, மிளகாய், துவரை, புழுங்கலரிசி, சாம்பார், மோர், வத்தக்குழம்பு ஆகியவற்றை சாப்பிடலாம். வெந்நீர் குடித்து வருதல் மற்றும் வெந்நீர்ல் குளித்து வருதல் மிகவும் சிறந்தது.
குறிப்பு:
இந்த மருந்து சாப்பிடும் நாட்களில் 3 முறைகளுக்கு மேல் மலங்கழிந்தால் ஒவ்வொறு வேளை மருந்துடனும் அரை தேக்கரண்டி தேனை கலந்து கொள்ளவும்.
மலச்சிக்கல் ஏற்படாது. அப்படி ஏற்பட்டால் உணவில் சிறிது கீரைகளை கூட்டி சாப்பிடவும்.

No comments:
Post a Comment