மருத்துவக் குணங்கள்:
காளான் என்பது சைவ பிரியர்களின் வரப்பிரசாதம். அனைவருக்குமே ஏற்ற வகையில் இயற்கை அளித்திருக்கும் உணவு எனலாம். நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடக்கின்றன. சாதாரணமாக குப்பை கூளங்களில் வளரும் காளான்களை தவிர்த்து, நாம் உண்ணத் தகுந்த பல வகை காளான்களின் வகைகள் இதில் உள்ளன. இவை பல்வேறு இடங்களில் சிறு தொழிலாக பயிரிடப்பட்டு விற்பனைக்கு வருகின்றது. இவ்வகை காளான்களில் கிடைக்கும் உயிர் சத்துக்கள் பல்வேறு வியாதிகளை கட்டுபடுத்தவும் குணப்படுத்தவும் அறும் மருந்தாய்
செயல்படும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டறிந்து சீனா ஜப்பான் போன்ற நாடுகள் இதை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருப்பதால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்றது. மேலும் வாழ் நாளை நீடிக்கும் வலுவான இதயத்திற்கு மருந்தாய் உதவுகின்றது.
இன்று பரவலாக காணப்படும் இரத்த கொதிப்பு மற்றும் இரத்த கொழுப்பு போன்ற உயிர் கொல்லி நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. அதற்கு தேவையான பொட்டாசியம் என்ற சத்து அடங்கியுள்ளதால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை கட்டுபடுத்த இது உதவுகிறது.
ஸ்ட்ரெஸ் என்ற மனச்சோர்வையும் போக்கும் அறுமருந்தாகவும் இது செயல்படுகின்றது.
அனிமிக் என்ற இரத்த சோகையை கட்டுபடுத்தவும் இது உதவுகிறது.
புற்று நோய் நிவாரணியாகவும் பயன்படுகின்றது.
மேலும் இதில் நீர் சத்து அதிகப்படியாக உள்ளதால் உடல் எடையைக் குறைப்பவர்களுக்கேற்ற உணவு.
No comments:
Post a Comment