Jun 16, 2012

கர்ப்பகால கவனிப்பின் 10 வழிகள்

1.தகுந்த அளவு உணவு

தானியவகைகள்,,முடை,இறைச்சி,பால்,பழவகைகள்,காய்கறி வகைகள் ஆகியவற்றை உண்ண வேண்டும்

2.உட்கொள்ள வேண்டிய மாத்திரைகள்:

 நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் ஆரம்பத்திலிருந்து கற்பம் தரித்த 12வாரங்கள் போலிக் அமில மாத்திரையை தினமும் 400அப  மாத்திரையை தவறாமல் எடுக்க வேண்டும்.



ஏனெனில் முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.


3.மது அருந்துவதை நிறுத்த வேண்டும்:

   மது அருந்துவது குழந்தைக்கு தீங்கு விளைவிக்ககூடிய தொருசெயல்.அதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும்.

4.புகை பிடித்தலை தவிர்த்தல்:

  நீங்கள் கற்பம் தறிக்க எண்ணிய நேரத்திலிருந்து புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும்.புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.

5.டோக்சோ பிளாஸ்மோசிஸ்:

  இது கற்பகாலங்களில் ஒட்டுண்ணியால் ஏற்படகூடிய ஒரு வகை நோய்.இந்நோய் கற்பங்காலங்களில் ஏற்படின் குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமான நோய்களை ஏய்படுத்தும்.அனைத்து விதமான உணவுகளை உண்ணும் போதும் நன்கு கழுகி,வேகவைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள்.

6.பரிசோதனை நேரம்:

கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.

7.தவிர்க்கவேண்டிய மருந்துகள்:

கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.

8.ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:

கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.

9.தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:

மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.

10.மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:

உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...