விஞ்ஞானமும் மருத்துவமும் இணைந்து இன்று அளப்பெரிய சாதனைகளை செய்து
வருகின்றது இந்த துறை வல்லுனர்கள் மக்களின் சுகாதாரம் நோய் பாதுகாப்பு
போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் இந்த வகையியல் புதிய
கண்டுபிடிப்புக்களும் வரவுகளும் இதற்கு சான்றாகின்றன அண்மையில்
வெளி வந்த சிமார்ட் போன் என்று அழைக்கப்படும் கைபேசிகளில் மருத்துவ
ஆய்வு
செய்யக்கூடிய பல மென்பொருட்களும் வசதிகளும் புகுத்தப் பட்டுள்ளன ஆனால்
இப்போது அவை மேம்படுத்தப்பட்டு மீண்டும் வர இருப்பதுதான் இங்கே
குறிப்பிடத்தக்க விடயம் கேமரா, படம் பார்ப்பது, கேம் ஆடுவது என
பொழுதுபோக்காக மட்டுமின்றி, மருத்துவ ரீதியாகவும் ஸ்மார்ட் போன்கள் அதிகம்
பயன்படுகின்றன. இதன் மருத்துவ பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக
நியூசிலாந்தின் மனுகாவ் தொழில்நுட்ப கழகத்தின் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
துறை ஆராய்ச்சியாளர்கள் ஹெலன் ஷூ, டிம் ராபர்ட்ஸ் ஆய்வு நடத்தி
வருகின்றனர். அவர்கள் கூறியதாவது:
ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவற்றை தற்போது ஸ்மார்ட்
போன்கள் மூலமாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. எக்ஸ்ரே, இசிஜிகூட வந்துவிட்டன.
இந்நிலையில், ப்ளூடூத், வைஃபி வசதி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை
ஒருங்கிணைத்து மைக்ரோ கன்ட்ரோலர் அடிப்படையிலான வயர்லெஸ் சிஸ்டம் ஒன்றை
உருவாக்கி இருக்கிறோம்.
இதய துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ரத்தத்தில் சர்க்கரை அளவு
ஆகியவற்றை ஸ்மார்ட் போன் தொடர்ச்சியாக கண்காணிக்கும். உடன்
இணைக்கப்பட்டிருக்கும் ப்ளூடூத் மூலம் இதுபற்றிய தகவல் வைஃபி அல்லது
இன்டர்நெட் இணைப்பு மூலமாக உங்களது டாக்டரின் ஸ்மார்ட் போனுக்கு
உடனுக்குடன் அனுப்பப்படும். இருந்த இடத்தில் இருந்தே அவர் கண்காணிக்க
முடியும். இதனால், அவசரகால சிகிச்சைகளை உடனுக்குடன் செய்வது சாத்தியமாகும்.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
No comments:
Post a Comment