தினமும்
4 கப் டீ சாப்பிட்டால் நீரிழிவு நோய் வராது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதிக அளவில் டீ குடித்தால் உடல்நலத்துக்கு கேடு ஏற்படும் என்ற பொதுவான
கருத்து நிலவி வருகிறது. தற்போது அந்த பழக்கம் நன்மை தரக்கூடியதாகவும்
உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது தினமும் 4 கப் டீ
குடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வராது என கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பா கண்டத்தில் டீ குடிப்பவர்கள் சுமார் 12 ஆயிரம் பேரிடம் ஆய்வு
நடத்தப்பட்டது. அவர்களில் தினமும் குறைந்தது 4 கப் டீ குடிப்பவர்களில் 20
சதவீதம் பேர் நீரிழிவு நோயின்றி இருந்தனர்.எனவே டீ
குடிப்பது நல்லது. அதே நேரத்தில் பால் மற்றும் அதிக சர்க்கரை கலந்து
தயாரித்து குடிக்கும் டீயினால் கெடுதல் வரவும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர். டைப் 2 நீரிழிவு நோய் உடல் பருமனால் உருவாகிறது. எனவே
உணவு கட்டுப்பாடு அவசியம் என்றும் ஆய்வு நிபுணர் கிறிஸ்டியன் ஹெர்டென்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment