இன்றைய
பரபரப்பான விஞ்ஞான யுகத்தில் டென்சன் ஆகாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.
பணிச்சுமை, ஏமாற்றம், எதிர்பார்த்தது கிடைக்காமல் போவது போன்ற காரணங்களால்
டென்சன் உருவாகிறது. நாளடைவில் இதுவே மன அழுத்தம் (டிப்ரஷன்) நோயில் தள்ளி
விடுகிறது.
இந்தியாவில் மன அழுத்தம்
நோய்க்காக மனநல டாக்டர்களிடம் சென்றால் ரிலாக்ஸ் ஆக இருக்க கற்றுக்
கொள்ளுங்கள், வாக்கிங் செல்லுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் என்று ஆலோசனை
கூறுவார்கள். மன அழுத்தத்தை குணப்படுத்தும் மருந்துகளும் வந்துவிட்டது.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற
வளர்ந்த நாடுகளிலும் மன அழுத்த நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
ஆய்வில் தெரிய வந்தது. மன அழுத்த நோய்க்கு மருந்து உட்கொள்தல் தவிர
உடற்பயிற்சி செய்தால் குறையுமா என்று லண்டனைச் சேர்ந்த பிரிஸ்டல்
பல்கலைக்கழகம், எக்செடர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ குழு ஆய்வு
நடத்தியது.
இதற்காக அவர்கள் மன அழுத்தம்
நோயால் பாதிக்கப்படட 18 வயது முதல் 69 வயதுக்குட்பட்ட 361 பேரை
பயன்படுத்தினார்கள். அவர்களை இரு பிரிவாக பிரித்தனர்.
ஒரு பிரிவினர் வழக்கமாக அவர்கள்
செய்யும் பணியை எப்போதும் போல் மேற்கொள்ளச் செய்தனர். மற்றொரு பிரிவினரை
உடற்பயிற்சியில் ஈடுபடுத்தினார்கள். 12 மாதங்கள் இந்த ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. தினமும் அவர்களது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.
இதில் உடற்பயிற்சியால் அவர்களது
மன அழுத்தம் கொஞ்சம்கூட குறையவில்லை என தெரிய வந்தது. உலகில் முதல் முறையாக
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மெடிக்கல்
கார்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ளதாக டெய்லி டெலிகிராப் பத்திரிகை
செய்தியில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment