Sep 22, 2012

மம்தா நடவடிக்கைக்கு பதிலடி மே.வங்க காங். அமைச்சர்கள் 6 பேர் இன்று ராஜினாமா



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperகொல்கத்தா: டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி ஆகியவற்றை கண்டித்து மத்தியில் ஐமு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகியது. அக்கட்சியை சேர்ந்த 6 மத்திய அமைச்சர்கள் நேற்று ராஜினாமா செய்தனர். கட்சி தலைவர் மம்தாவின் அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக, மேற்கு வங்கத்தில் அவரது தலைமையிலான கூட்டணி அரசில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் 6 பேர் இன்று தங்கள் பதவியை ராஜினாமா
செய்கின்றனர். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கூறியதாவது: ஐமு கூட்டணியில் இருந்து மம்தா வெளியேறியது துரதிருஷ்டவசமானது. இன்று காலை 11.30 மணிக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு நீர்பாசன துறை அமைச்சர் மனாஸ் புனியா தலைமையில் காங்கிரஸ் அமைச்சர்கள் 6 பேர் முதல்வர் மம்தாவை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிப்பார்கள். பின்னர் கவர்னரை சந்தித்து திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்ளும் கடிதத்தை கொடுக்கிறார்கள். டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததற்கு பதிலடியாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது, காங்கிரஸ் தொண்டர்கள் மீதான தாக்குதல் ஆகிய காரணங்களுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்த ஜாங்கிபூர் எம்பி தொகுதிக்கு அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் காங்கிரஸ் சார்பில் பிரணாப் மகன் அபிஜித் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் திரிணாமுல் சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என மம்தாவை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பிரதீப் கூறினார்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...