Sep 9, 2012

இளவரசர் ஹரி, திடீரென தாக்குதல் ஹெலிகாப்டர் செலுத்த ஆப்கான் போகிறார்!




“பிரிட்டிஷ் இளவரசர் ஹரி, தாக்குதல் ஹெலிகாப்டர்களை செலுத்த ஆஃப்கானிஸ்தான் செல்கிறார்”  இவ்வாறு அறிவித்துள்ளது  பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு.
தலிபான்களுக்கு எதிரான யுத்தத்துக்கு நேட்டோ நாடுகளின் படைகளுடன் பிரிட்டிஷ் படைகளும் அங்கு யுத்தம் புரிகின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் ‘பார்ட்டி’ கொண்டாடி, நிர்வாண போட்டோக்கள் வெளியானதில், சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் இளவரசர். இப்போது, யுத்தத்துக்கு செல்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2008-ல் இளவரசர் ஹரி, ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படைகளுடன் இணைந்து போர் புரிய சென்றிருந்தார். அப்போது ஆப்கானிஸ்தானில் அவரது பணி, தரை விமானக் கட்டுப்பாட்டு மையத்தில், on-ground air controller ஆக இருந்தார். தாக்குதலுக்கும், ராணுவ சப்ளை வழங்குவதற்கும் செல்லும் ஹெலிகாப்டர்களுக்கு தரையில் இருந்து சப்போர்ட் கொடுக்கும் பணி அது.
இம்முறை, நிஜமாகவே தலிபான்களின் தாக்குதல் நடக்கும் இடங்களுக்கு பறக்க போகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஹரி செல்லப்போகும் பிரிட்டிஷ் ராணுவ முகாம், ஆப்கானிஸ்தானின் ஹெல்மான்ட் மாகாணத்தில் உள்ளது. Camp Bastion என்று பெயர். இந்தப் பகுதியில் தலிபான்களின் நடமாட்டம் அதிகம். தாக்குதல்களும் அதிகம். நிஜமாகவே அங்கே போகத்தான் போகிறாரா? அல்லது, லாஸ் வேகாஸ் போட்டோ சர்ச்சைகளுக்கு ஒரு டைவர்ஷனா என்பது தெரியவில்லை.
ஹெல்மான்ட் மாகாணத்தில் தலிபான்கள் பார்ட்டி ஏதும் வைப்பதாகவும் தகவல் இல்லை!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...