இந்த வழக்கில் சுவீடனு க்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சமடைந்த அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வெடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தூதரகத்தில் இருந்து அவர் வெளியே வந்தால் கைது செய்யலாம் என லண்டன் போலீசார் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்னை தீர வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராத உலக நிகழ்வுகளால் தான் மாற்றம் வரலாம். அதாவது ஈரானுடன் போர் ஏற்பட்டாலோ, அமெரிக்க தேர்தல் நேரத்திலோ, சுவீடன் அரசு இந்த வழக்கை கைவிட் டால் இப்பிரச்னை க்கு தீர்வு கிடைக்கலாம். இவற்றில் மூன்றாவதாக கூறியது நிகழ அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கு குறித்து தீர விசாரித்த பிறகு சுவீடன் அரசு இதை கைவிடலாம். இதற்கு 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகும். எனவே, ஓராண்டுக்கு நான் ஈக்வெடார் தூதரகத்திலேயே தங்க வேண்டியிருக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment