Sep 17, 2012

700 கி.மீ. தூரம் சென்று தாக்கும் பாபர் ஏவுகணை பாகிஸ்தான் சோதனை


இஸ்லாமாபாத் : அணுகுண்டை ஏந்திச் சென்று 700 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தேசிய ஆணையம்
இந்த ஏவுகணையை சோதனை செய்தது. ஆனால், எங்கிருந்து சோதனை செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. பாபர் அல்லது ஹாட்ப்,7 என்ற இந்த ஏவுகணை முழுவதும் தானாகவே இயங்கும் திறன் கொண்டது. குறைந்த உயரத்தில் நிலம் மற்றும் கடலின் மீது பறந்து சென்று 700 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்கை மிகச் சரியாக தாக்க வல்லது.

அணுகுண்டு மற்றும் வேறு வழக்கமான குண்டுகளை தாங்கிச் செல்லக்கூடியது. இதனால் நாட்டின் பாதுகாப்பு, வலிமை, எதிர்க்கும் சக்தி ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றதையடுத்து ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு அதிபர், பிரதமர், ராணுவ தளபதிகள் பாராட்டு தெரிவித்தனர். பாகிஸ்தான் இந்தாண்டு இதுபோல பல ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...