Sep 24, 2012

சீன ராணுவத்தில் முதல் விமானம் தாங்கி கப்பல்

சீன ராணுவத்தில் முதல் விமானம் தாங்கி கப்பல்
 
பெய்ஜிங், செப். 24-

சீனா ராணுவம் உலகில் வலிமையான ராணுவமாக இருந்தாலும், இதுவரை சீனாவிடம் விமானம் தாங்கி கப்பல் இல்லாமல் இருந்தது. அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவுக்கு ராணுவத்தை வளர்த்து வரும் சீனா இப்போது முதன் முதலாக ராணுவத்தில் விமானந்தாங்கி கப்பலை சேர்த்துள்ளது.

இந்த கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானதாகும். ரஷியா 1991-ம் ஆண்டு உடைந்தபோது அந்த கப்பல் உக்ரைனுக்கு சொந்தமானது. 2002-ம் ஆண்டு அந்த கப்பலை சீனா விலைக்கு வாங்கி புதுப்பித்தது.

சீனாவில் உள்ள டேலியன் கப்பல் கட்டும் துறையில் பல ஆண்டுகளாக புதுப்பிப்பு பணி நடந்து முடிந்து, இப்போது சீன கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

கப்பலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பணிக்காக பயன்படுத்த போவதாக சீனா கூறியுள்ளது. ஆனால் சீனா சமீபகாலமாக பக்கத்து நாடுகளான ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்சுடன் கடற் நிலபரப்பு தொடர்பாக மோதல் போக்கை கடைப் பிடித்து வருகிறது. எனவே இந்த கடல் பகுதியில் கண்காணிப்பதற்காகவும் அந்த நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும் கப்பலை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல் 990 அடி நீளம் கொண்டதாகும். 36 விமானங்கள், 16 ஹெலிகாப்டர்களை இதில் நிறுத்தி வைக்கலாம். 3 ஆயிரம் வீரர்கள் கப்பலில் தங்கியிருக்கும் வசதி உள்ளது. ரஷியாவிடம் இந்த கப்பல் இருந்தபோது வர்யாக் என்று பெயரிடப்பட்டு இருந்தது. சீனா இதற்கு ஷிலேங் என்று பெயரிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...