
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தினால் 3 ஆம் உலக மகா யுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போகும் என ஈரானின் வான்படை தளபத்தி பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹஜிஷாடே தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு சில நாட்களாக ஈரானின் அணு உலைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் மிரட்டல் விடுத்து வருகின்றது. சமீப காலமாக ஈரானில் அதிகரித்து வரும் அணுச் செறிவூட்டல் பணிகள் அணுவாயுத உபகரணங்களைப் பெருமளவு தயாரித்து மேற்குலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் விதத்தில் அவற்றைப்
பயன்படுத்துவதற்கே என உலகின் வல்லரசுகள் கருதுகின்றன.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள அவர் ஈரான் தனது அணுவாயுதத் திட்டங்கள் அமைதி காக்கும் காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்காக எனவும் இத் திட்டத்தை சீர்குலைக்கும் இஸ்ரேல் உட்பட மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகளுக்கு உடனே பதிலடி கொடுப்போம் எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment