Sep 1, 2012

ஒபாமா நடவடிக்கை இந்தியருக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி



வாஷிங்டன்: அமெரிக்காவில் புகழ் வாய்ந்த ஜான் எப் கென்னடி மையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரொமேஷ் வத்வானி (64) நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் பராக் ஒபாமா இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். ஜான் எப் கென்னடி மையத்தின் நிர்வாகக் குழுவுக்கு 9 புதிய உறுப்பினர்களை ஒபாமா அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில், இவர்களை தேர்வு செய்ததில் நான் பெருமைப்படுகிறேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தங்களின் அனுபவம் மற்றும் திறமைகள் மூலம் இந்த மையத்தை மேலும் சிறப்படையச் செய்வார்கள்’’
என்றார். சிம்பனி டெக்னாலஜி குழுமத்தின் நிறுவனரும், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான வத்வானி பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களை துவக்கி நடத்தி வருபவர். வத்வானி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் இவர் உள்ளார். வத்வானி இந்தியாவில் மும்பை ஐஐடியில் பி.ஏ. பட்டமும், கார்னேஜ்மெலன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் பி.எச்டி. பட்டமும் பெற்றவர். அமெரிக்காவில் உள்ள பணக்கார இந்தியர்களில் இவரும் ஒருவர். ஏற்கனவே தனது நிர்வாகத்தில் பல இந்தியர்களுக்கு முக்கிய பதவிகளை ஒபாமா அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...