அதில் மிக எளிய வழி காதுகொடுத்துக்கேட்டல் என்று முந்தைய பதிவில் பார்த்திருந்தோம்.
அதற்கு அடுத்ததாக மேலும் பல இதயச்சோதனைகள் வந்திருக்கின்றன.
இரத்தப்பரிசோதனை,
ஈசிஜி(ECG), எக்ஸ்ரே(X-Ray),எக்கோகாடியோகிராம்(Echo
cardiogram),எக்சர்சைஸ் ஈசிஜி(Exercise-ECG),
அஞ்சியோகிறாம்(Angiogram),சீடி ஸ்கான் (CT Scan),MRI ஸ்கான்,கதிர்வீச்சு ஸ்கான்(Radio Nuclide)., என பலவகையான பரிசோதனை முறைகள் இருக்கின்றன.
மருத்துவம் என்பது மந்திர தந்திர மல்ல.நோயொன்றை கண்டறிவதற்கு முன்னர் பல
தகவல்கள் திரட்டப்படும்.இந்தத்தகவல்கள் ஆராயப்பட்டுத்தான் நோய் பற்றிய
தீர்மானம் எடுக்கப்படுகிறது.
நோய்
ஒன்று கண்டறியப்படுவது ஒரு கூட்டு முயற்சி இதில் கருவியை வடிவமைத்த
பொறியியலாளரும் அடங்குவார்.மருத்துவர் இந்த தகவல்களை மொழி பெயர்க்கும்
மூளையாக இருப்பார்.
இதயம் ஒரு பம்பி.தசையாலானது.கலங்களாலானது தசை.தசைக்குள் பல இரசாயன
மாற்றங்கள் நிகழுகிறது. இதயம் துடிப்பதற்கான நரம்புத்தொழிற்பாடு ஒரு
மின்னியல் மாற்றம். பம்பியினுள் வால்வுகள் இருக்கின்றன.பம்பிக்கு இரத்தம்
வருகிறது,பம்பி இரத்தத்தை உந்தித்ததள்ளுகிறது.
இதயம்
பற்றிய மருத்துவப்பரிசோதனை
பல்பரிமாணமுடையது.இரசாயன,மின்னியல்,பௌதிக,உயிரியல் என விஞ்ஞானத்தின்
இதயத்தின் அனைத்து பரிமாணங்களையும் அளவிடுவதாகும்.
பரிசோதனைகளில்
இருவகை உண்டு. சில உடலை ஊடறுத்து செய்யவேண்டியிருப்பவை.அவை உடலுக்கு
அசுகரியத்தை தரக்கூடியவை.உடலுக்கு வெளியாக செய்ய்யப்படுபவை.இவை ஈசிஜி
போன்றவை
இரத்தப்பரிசோதனை இதயக்கலங்களின் சேதத்தை ,சேதம் விளவிக்கக்காரணமான உடலின் இரசாயன உடலியல் மாற்றங்களை அளவிடும்.
.
ஈசிஜி(ECG)
இதயத்தின்
துடிப்பு ஒரு மின்னியல் ஒழுங்குக்கு ஏற்பவே நிகழ்கிறது.மின்னும்
விளக்குகள் போல இதயத்தினுள்ளே ஒரு மின் பொறி இருக்கிறது. ஈசிஜி உடலின்
மேற்பரப்பில் இந்தத்துடிப்பு உடலின் மேற்பரப்பில் ஒரு மின்நடனத்தை
ஏற்படுத்துகிறது.மின் கடத்திகளைப்பொருத்தி ஒரு நீளக்கடதாசியில்
அலைகளாகப்பதியப்படும் ஈசிஜி இதயத்தின் துடிப்பு,நரம்புக்கடத்தல்,
மாரடைப்பு, என பல தகவல்களைத்தருகிறது.இது உடலுக்கு எந்தப்பாதிப்புமில்லாமல்
செய்யப்படக்கூடிய பரீட்சை.
உடற்பயிற்சி-ஈசிஜி-Exercise ECG
ஒருவரை
உடற்பயிற்சி இயந்திரத்தில் ஓடவிட்டு பல்வேறு நிலைகளில் ஈசிஜி
எடுத்துப்பார்ப்பார்கள்.இதயத்தின் தாங்கும் சக்தியை உடலியக்கத்துக்கெதிராக
அளவிடுவது இது பலவீனமான இதயம் உள்ளவர்களில் அதாவது இதயத்தின் தசிகளுக்கு
இரத்த ஓட்டம் அடைபட்டு உள்ளவர்களில் ஈசிஜி மாற்றத்தைக்காட்டும்.
எக்ஸ்ரே-X-Ray
எக்ஸ்ரே
இதயத்தின் நிழற்படத்தை தருகிறது. இதயத்தின் அளவு,அமைப்பு என்பவற்றை
அறியக்கூடியதயிருக்கும்.கதிர்வீச்சுத்தாக்கம் உடலுக்கு ஏற்படும்
எக்கோகார்டியோகிராம்-Echocardiogram:
வௌவாலைப்போல
மீயோலி அலைகளைப்பயன்படுத்தி இந்தக்கருவி செயற்படுகிறது.மீயொலி அலைகள்
உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துதில்லை.நெஞ்சுக்கூட்டின் வெளிப்புறமாக
மீயொலியலைகளைக்கருவி உருவாக்க அது இதயத்தின் சுவர்களில் பட்டுத்தெறித்து
வருவதை கருவி படமாக்கித்தருகிறது.ஒரு தளத்தில் வெட்டுமுகம்போலத்தருவதால்
இந்தப்படத்தை மொழிபெயர்ப்பதற்கு மருத்துவ அறிவு அவசியம்.
தொண்டைக்குள்ளாக செலுத்தி இதயத்தின் உட்பக்கப் பார்வையும் அறியலாம்.அதாவது இதயத்தை சுற்றிச்சுற்றி பார்ப்பது.
இதில் இரத்த ஓட்டத்தை அறியக்கூடிய ஒருவகையும் உள்ளது.
இதயத்தினுள்
இரத்தப்பாய்ச்சலின் வேகம் அளவு இதயச்சுவரின் தடிப்பு சுருங்கும்
திறன்,வால்வுகள் என பல பௌதிக காரணிகள் அளவிடப்படுகின்றன. இதயத்தின்
பம்பித்திறன் குறைகிறபோது இதய வழுவல் என்பார்கள். தசைகள் சுருங்கும் திறன்
குறந்து மீளுந்தனமை இழக்கப்பட காடியோமையோபதி என்பார்கள்.
CT /MRI Scan
சீடி ஸ்கான் எம் ஆர் ஐ ஸ்கான் எனப்படுபவை இதயத்தை துல்லியமாகப்பார்க்க உதவுகின்றன.
இதயத்தினுள்ளே பார்த்தல்-Cardiac Catheterization
உடலை
ஊடுருவி உள்ளே பார்க்கக்கூடிய தொழில்னுட்பம் இன்று
சாத்தியமாயிருக்கிறது.இரத்தக்குழாய்களுக்கூடாக –தொடையில் உள்ள ஒரு
நாளத்தினூடாக)கமாரா பொருத்தப்பட்ட மெல்லிய குழாய்களைச்செலுத்தி அவற்றினூடாக
இதயத்தின் உட்புறங்களை நேரடியாகவே பார்க்கலாம்.அத்தோடு இதயத்தசைகளுக்கு
இரத்தத்தை வழங்கும் நுண்ணிய இரத்தக்குழாய்களில் கதிர்வீச்சுப்பதார்த்தத்தை
செலுத்தி அதை எக்ஸ்ரே இல் படம்பிடிப்பார்கள். மாரடைப்பை ஏற்படுத்துகிற
இரத்தக்குழாயடைப்பினை கண்டுபிடிப்பார்கள். இந்தக்கருவியை பயன்படுத்தி
அடைப்பை நீக்கவும் செய்வார்கள்.
Radio Nuclide Imaging
உடலுக்குப்பாதிப்புவிளைவிக்காத
சிலகதிர்வீச்சுத்தன்மை உள்ள பதார்த்தங்களை இரத்தத்தில் செலுத்தி உடலை
கதிர்வீச்சுக்கமராவினால் படம் பிடித்தால் அது இரத்தம் ஒளிரும் இரத்தமாக
இதயத்தசைகளுக்குள் பரவுவது தெரியும்.இதயத்தசையின் எப்பகுதி
பாத்திப்படைந்திருப்பதென்பது தெரியவரும்.
மேற்படி சோதனைகள் இதயத்தின் திறனை அளவிட்டு உடலின் பாதிப்பை அளவிட உதவும்.
இதில்
உள்ள சிக்கல் என்னவென்றால் எல்லாப்பரிசோதனைகளுக்கும் வழு ஏற்படக்கூடிய
தன்மை இருக்கிறது. மருத்த்துவத்தில் எதுவும் நூறு வீதம் சரி என்று
எடுக்கப்படுவதில்லை. ஒரு தகவல் ,ஒரு பரிசோதனை போதும் என்பது ஒரு சில நோய்
நிலைகளுக்குத்தான் பொருந்தும்.
ஒவ்வொன்றும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம்.
எது சரியென்பதை தீர்மானிப்பதில் திரட்டப்பட்ட தகவல்களோடு ஆய்வுகள், மருத்து அறிவோடு கூடிய நல்ல அனுபவமும் தேவைப்படுகிறது.
இப்படி ஒரு இதயம் நல்லதா கெட்டதா என்பதைத்தீர்மானிப்பதற்கு ஏராளமான தகவல்களைத்திரட்டி மருத்துவம் ஒரு முடிவுக்கு வரும்போது ஏனைய பல விடயங்களில் நாம் அனேகமாக ஒரு சின்னத்தகவலோடு நல்லது கெட்டதை தீர்மானித்துவிடுகிறோம்..
விஞ்ஞானச்சிந்தனைக்கும் சாதாரண சிந்தனைக்கும் உள்ள வேறுபாடு அது.
No comments:
Post a Comment